தைரியமும் மனஉறுதியும் கொண்டு துன்பங்களில் இருந்து மீண்டெழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெண்கள் தமிழ்நாட்டில் ஏராளம். அவர்கள் வாழுகிற சமுதாயத்தை ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமான நேர்மறையான சவாலுக்கு உட்படுத்துவதில் வெற்றியும் கண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட நமது தமிழ்நாட்டில் மிகவும் இளைய பொதுபொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தனது ஓர் ஆண்டையும் தாண்டிய வெற்றிப் பயணத்தில் மனதை தொடும் கதையம்சம், மனஉறுதி கொண்ட பெண்களின் சக்தியை, அவர்களின் திறமையை தனது நிகழ்ச்சிகளின் மூலம் காட்சிப்படுத்தி கொண்டாடி வருகிறது. இந்த குறிக்கோளை பின்தொடரும் வகையில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு தறி புத்தம்புது மெகாதொடர் மகிழ்ச்சியோடும் பெருமையோடும் ஒளிபரப்ப இருக்கிறது.