ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள் தமிழ் நாடு

வேளாண் பட்ஜெட்டை ஆதரித்து ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர்!!

by tamil2daynews
August 15, 2021
in தமிழ் நாடு
0
வேளாண் பட்ஜெட்டை ஆதரித்து ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர்!!
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 

விவசாயிகளுக்கு எண்ணற்ற நன்மைகளுடன் கூடிய வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை, நல்ல தொடக்கமாக கருதலாம் – காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன் குமார் அறிக்கை

வேளாண் துறையில் தனி பட்ஜெட் தாக்கல் செய்து விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் அடுத்த கட்டத்திற்கு உயரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி கொடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டி, வேளாண் பட்ஜெட்டை வரவேற்கிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன் குமார் கூறியுள்ளார்.

இது குறித்து பவன் குமார் வெளியிட்ட அறிக்கை விவரம்:

“தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு தொடர்ந்து பல கோரிக்கையை முன்வைத்து வந்துள்ளது. அதில் பலவற்றை நிறைவேற்றும் வகையில் வேளாண் துறைக்கான தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்து கொள்கிறோம்.
இந்த வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகள்  இடம் பெற்றிருந்தாலும் இயற்கை வேளாண்மை குறித்த அறிவிப்புகளை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறோம்.

அதிலும் குறிப்பாக…

வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கென தனிப்பிரிவு உருவாக்கப்படும்

2021-22ம் ஆண்டில் பயிர் காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் பனை மரத்தை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெறுவது கட்டாயம்

2020-21 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை ரூ.40 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த ரூ.2,327 கோடி ஒதுக்கீடு

ரூ.6 கோடியில் கடலூர், திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, நெல்லை, தஞ்சை, திருச்சி, வேலூர், கரூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் 10 புதிய உழவர் சந்தைகள்

கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2,750லிருந்து ரூ.2900 ஆக உயரும்

ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் 100 ஏக்கரில் அமைக்கப்படும்

கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரசி ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை

அரசு விதைப் பண்ணைகள் மூலம் ரூ.25லட்சம் செலவில் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி

இப்படி வேளாண் துறையில் புதுமைகளை புகுத்தி, வேளாண் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் வகையிலும், விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலும்,
வேளாண் தனி பட்ஜெட்டில், 34 ஆயிரத்து, 220 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பது பாராட்டுக்குரியது.
அதோடு, வேளாண் பட்ஜெட்டில், இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
இப்படி எண்ணற்ற நன்மைகளுடன் கூடிய வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை, நல்ல தொடக்கமாக கருதலாம். முடிவு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறோம். அறிவிப்புகள் அப்படியே செயல் வடிவத்துக்கு வந்தால் தமிழக விவசாயிகள் வாழ்க்கைத்தரம் கண்டிப்பாக கொஞ்சமாவது உயரும்.

இவ்வாறு அறிக்கையில் பவன் குமார் கூறியுள்ளார்.

Previous Post

வேளாண் பட்ஜெட்; கோரிக்கைகளை முன்வைத்த காங்கிரஸ் தலைவர் பவன்குமார்!!

Next Post

அமுதும் தேனும்’  –  மறைந்த பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனாவின் 87ஆவது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

Next Post
அமுதும் தேனும்’  –  மறைந்த பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனாவின் 87ஆவது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

அமுதும் தேனும்'  -  மறைந்த பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனாவின் 87ஆவது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • யோகேஸ்வரன் திறமையை பாராட்டிய திரை பிரபலங்கள்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானியின் இசையில் பள்ளி பருவ காதலை சொல்லும் ‘நினைவெல்லாம் நீயடா’..!

    0 shares
    Share 0 Tweet 0
  • கலைஞர் தொலைக்காட்சியின் அடுத்த அதிரடி – லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் புதிய நிகழ்ச்சி “நேர் கொண்ட பார்வை”

    0 shares
    Share 0 Tweet 0
  • Pollappu Movie Pooja Photos

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் வழங்கும், கௌதம் கார்த்திக் & சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

March 21, 2023

முகேன் ராவ், தேஜு அஷ்வினி நடிப்பில், மகேஷ் ராம் கே இயக்கத்தில், எஸ் ஜி சி மீடியா தயாரிப்பில், தரண் குமார் இசையில் கலகலப்பான பிரேக் அப் ஆல்பம் ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’

March 21, 2023

ZEE5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் டிரெய்லர் வெளியீட்டு விழா !

March 21, 2023

‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

March 21, 2023

அப்புக்குட்டிக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும் என்கிறார் “சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ஏ.எல்.ராஜா.

March 21, 2023
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நற்பணி  இயக்கம் சார்பில் தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் தென்மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நற்பணி இயக்கம் சார்பில் தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் தென்மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி.

March 21, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!