சான்றிதழ் – விமர்சனம்
கருவறை கிராமம் கட்டுப்பாடு நிறைந்தது. வெளியாள் யாரும் உள்ளே எளிதாக வரமுடியாது. வந்தாலும் திரும்ப முடியாது. ஊர் இவ்வளவு கட்டுப்பாடான கிராமத்துக்கு ஜனாதிபதி விருது கிடைக்கிறது. ஆனால் அதை வாங்க அந்த கிராமத்தினர் மறுக்கின்றனர். நேரடியாக கிராமத்துக்கு வந்து தந்தால்தான் விருது வாங்குவோம் என்கின் றனர். ஆனால் இதற்கு முன்பு அந்த கிராமம் அலங்கோலமான கிராமமாக இருந்தது .அந்த கிராமத்தை வெள்ளைசாமி (ஹரிகுமார்) என்பவர் திருத்த முயல்கிறார் . அவர் எப்படி கிராமத்தை திருத்துகிறார் என்பதை கிளைமாக்ஸ் விளக்குகிறது.
கருவறை கிராமத்தில் நூற்றுக் கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன. அதற்கு.ஒரு முன்பக்க வழி, பின் பக்கவழி இருக்கிறது. இப்படியொரு கிராமம் இருக்கிறதா என்பது தெரிய வில்லை இருந்தால் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது.
கிராமத்துக்குள் மக்களுக்கு தேவையான அத்தனை தேவை களும் இருக்கிறது. ஒட்டு மொத்த கிராமமும் சாதி இல்லாத சான்றிதழ் கேட்பது புதுசு.
தாறுமாறாக இருந்த கிராமம் திருத்துவதற்கு முன் எப்படியி ருந்தது என்று இரண்டாம் பாதி கதை சொல்கிறது. அதில் நல்லவர் என்று பார்த்தால் வெள்ளைச்சாமி யாக வரும் ஹரிகுமார்தான் மற்ற எல்லா பாத்திரங்களும் சோரம் போனதாக சித்தரிக்கப்பட்டது ஏனோ
மனைவி பற்றி சித்தரிக்கும் காட்சிகளும் ஏற்க முடியாததாக உள்ளது. கணவனை ஏமாற்றி விட்டு வேறு நபருடன் அவர்கள் ரூட் போட்டு சுற்றுவதாக காட்டுவது கொஞ்சம் ஓவர். ஹீரோவின் மனைவியே சோரம் போவதாக காட்டுவது முதலுக்கே மோசம்.
மனைவியாரை பற்றி லந்து செய்து வரும் கமெண்ட்டும் வேற காமெடியே கிடைக்கலையா என்று முணுமுணுக்க வைக்கிறது.
படத்தின் இரண்டாம் பாதி எடிட் செய்துவிட்டு.முதல் பாதியை மட்டும் உலக பட விழாக்களுக்கு அனுப்பினால் ஒரு சில விரதுகளை தட்டி வர வாய்ப் புள்ளது.
ஹீரோ ஹரிகுமார் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடித்திருக் கிறார் தன்னுடைய வேடம் மட்டுமே நன்றாக இருக்கிறதா என்று பார்த்திருப்பார்போல் தெரிகிறது. சுற்றியுள்ள பாத்திரங்கள், காட்சி களிலும் அவர் கவனம் செலுத்தி யிருந்தால் கதையில் இன்னும்.கொஞ்சம் மாற்றம் வந்திருக்கலாம்.
:எஸ் ஜே எஸ் சுந்தரம், ஜே வி ஆர் தயாரித்திருக்கிறார். பைஜு ஜேக்கப் இசை எஸ் .எஸ்.ரவி மாறன் சிவன் ஒளிப்பதிவு ஒ கே..இயக்குனர் ஜெயச்சந்திரன் ஜே வி ஆர் கதையின் முதல் பாதி யோசித்த அளவுக்கு இரண்டாம் பதியையும் யோசித்துதிருந்தால் பாராட்டைப் அள்ளியிருப்பார்