‘பரம் பொருள்’ – விமர்சனம்
கவி கிரியேஷன்ஸ் மனோஜ் & கிரிஷ் தயாரிப்பில் சி. அரவிந்த் ராஜ் இயக்கத்தில் சரத்குமார் – அமிதாஷ் நடித்த படம் ‘பரம்பொருள்’. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க, ‘ரிச்சி’ படத்தின் மூலம் பாராட்டுகளைப் பெற்ற ஒளிப்பதிவாளர் பாண்டி குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ‘டான்’, ‘சாணிக் காயிதம்’, ‘ராக்கி’, ‘எட்டு தோட்டாக்கள்’ படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்துள்ள நாகூரான் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். கலை இயக்குநராக குமார் கங்கப்பன், சண்டைக்காட்சி பயிற்சியாளராக தினேஷ் சுப்பராயன், நடன இயக்குநராக சதீஷ் கிருஷ்ணன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.
படம் எவ்வாறு உள்ளது என்பதை பார்ப்போம்…
நேர்மையன்பது இல்லாத போலீஸ் அதிகாரியாக இருக்கும் சரத்குமார் கையில் வசமாக சிக்குகிறார் ஹீரோ அமிதாஸ். அவருக்கு சிலை கடத்தல் கும்பலோடு தொடர்பு இருப்பதாகத் தெரிய வருகிறது. சரத்குமார் கைக்கு வந்து சேர்ந்துள்ள சிலையை அமிதாஸை வைத்து விற்க முனைகிறார் சரத். அவரின் எண்ணம் ஈடேறியதா? இடையில் அமிதாஸ் என்னென்ன வேலைகள் செய்தார்? என்பதே பரம்பொருளின் மீதிக்கதை
முதலில் சரத்குமார், மனுஷன் மீண்டும் ஒரு ரவுண்டு வரார் என்று தான் சொல்ல வேண்டும் போர் தொழில் மிகப் பிரம்மாண்டமான வெற்றிக்கு பிறகு பரம்பொருள் 60 வயதை தாண்டி கூட உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது சரத்குமாருக்கு பிளஸ்.
தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கனக்கச்சிதமாக நடித்து முடித்து இருக்கிறார் சரத்குமார்.
அடுத்தது அமிதாஸ், விஐபி யில் பார்த்த வில்லனா இவர்,என்று ஆச்சரியப்பட வைக்கும் படம் பார்க்கும் அனைவரையும்.
பார்க்க சாக்லேட் பாதியாக இருந்தாலும் கொஞ்சம் ரகுடாக தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை எள்ளளவும் மீறாமல் சூப்பரா நடித்திருக்கிறார்.
அதன் பிறகு கதாநாயகி படத்துக்கு தேவையில்லாத ஒன்று திரைப்படம் என்றால் கதாநாயகி இருக்க வேண்டும் கட்டாயமாக திணிக்கப்பட்டதா,
அடியாட்கள், வில்லன்கள் ஒன்னும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இது ஏன் இப்படி நினைவுக்கு வருகிறது என்றால் ஜெயிலர் திரைப்படம் பார்த்த பிறகு வில்லனா விநாயகம் தான் என்கிற எண்ணம் மனசுக்குள்ள வந்துட்டு போறது நிஜம் தான்.
பாண்டி குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு ஓகே.
இசை யுவன்ஷங்கர் ராஜாவா என்று கேட்க வைக்கிறது.இது பாடல்களால் வந்த வினை.பின்னணி இசை கேட்கும் பொழுது யுவன் சங்கர் ராஜாதான் என்று நம்ப வைக்கின்றது.
தொழில்நுட்ப கோளாறு என்றால் ஒரு சில காட்சிகளில் நம் கண்களுக்கு நன்றாகவே தெரிகிறது ஒரு சில காட்சிகளின் நீளத்தை சற்று குறைத்து இருக்கலாம்.
இதெல்லாம் ஓகே என்று சொல்லிவிட்டு முழு படத்தையும் பார்த்த பிறகு சரத்குமாரின் கதாபாத்திரம் சற்று நெருடலாகவே இறுதிவரை இருந்தாலும் படத்தின் இறுதி காட்சியில் வைக்கும் எதிர்பாராத திருப்பம் நம் மனதை விட்டு அகலவில்லை.