‘டீமன்’ – விமர்சனம்
ரமேஷ் பழனி வேல் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் டீமன் இவர் இயக்குநர் வசந்த பாலனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
இவர் இயக்கி வெளியிட்டுள்ள டீமன் திரைப்படம் சினிமாவில் டைரக்டராக வேண்டும் என்ற கனவோடு போராடிக் கொண்டிருப்பவர் விக்னேஷ் (சச்சின்) சுற்றி நடக்கும் சம்பவங்களை பற்றியது. விக்னேஷ்க்கு படம் இயக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு அப்பார்ட்மெண்ட்டில் அலுவகம் அமைத்து தங்குகிறார். ஒரு பேய் கதைக்கு ஸ்கிரிப்ட் எழுதுகிறார். இரவு தூங்கும் போது அமானுஷ்ய சக்திகள் கனவில் வந்து பயமுறுத்துகின்றன.
இந்த பயமுறுத்தல் அதிகமாக மன நிலை பாதிக்கப் படுகிறார் விக்னேஷ். இந்த நிகழ்வு ஏன் நடக்கிறது.? இதன் பின்னணி என்ன? என்ற கேள்விகளுக்கு பதிலை நோக்கி நகர் கிறது கதை இந்தியாவிலும், மேலை நாடுகள் சிலவற்றிலும் நடந்த உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து கதை உருவாக்கப் பட்டுள்ளது. கனவுகள் வந்து செல்லும் காட்சிகள் நம்மை பயமுறுத்துகின்றன. இருப்பினும் தொடர்ந்து இதே போல காட்சிகள் வருவது பய உணர்வை குறைத்து விடுகிறது. “பேய் தான வந்தா பாத்துக்கலாம்” என்ற ரீதியில் ரசிகர்கள் சென்று விடுகிறார்கள்.
ஒட்டு மொத்த படத்தையும் கதையுடன் தாங்கி பிடிப்பது ஆனந்த குமாரின் ஒளிப்பதிவுதான். கோணம் மற்றும் ஒளியின் வழியே ஒரு அமானுஷ்ய உலகத்திற்கு அழைத்து செல்கிறார். பயம், கோபம், அழுகை, மன சிதைவு என பல உணர்வுகளை நன்றாக தந்துள்ளார் சச்சின். ஹீரோயின் தேவைப்படாத கதையில் பெயரளவு ஹீரோயனாக வந்து போகிறார் அபர்நதி. கதையின் முடிவு இன்னமும் ஆழமாக வந்திருந்தால் டீமன் மிக சிறப்பான படமாக வந்திருக்கும்.
இருப்பினும் தொழில் நுட்ப அம்சங்களுக்காக இப்படத்தை பார்க்கலாம். தியேட்டரில் சென்று இப்படத்தை பார்த்தால் ஒரு சிறந்த காட்சி அனுபவம் கிடைக்கும்.
இருந்தாலும் இயக்குனர் ரமேஷ் பழனிவேல் முதல் முயற்சிக்கு அவரை மனதார வாழ்த்தலாம்.