“ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்” விமர்சனம்
கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகி ஒரு ட்ராவல் ஏஜென்சியில் வேலை செய்கிறார். இந்த ஏஜென்சி சிங்கப்பூரில் இருக்கிறது. நாயகிக்கு அந்த ஏஜென்சி வருடத்திற்கு ஒரு இலவச விமான டிக்கெட் கொடுக்கிறார்கள். அப்படி நாயகிக்கு சென்னைக்கு வர டிக்கெட் கிடைக்கிறது, அப்படி சென்னை வந்த நாயகி தன் நண்பரை சந்திக்கிறார். அப்படி சந்திக்கும் இடத்தில் ஒரு மர்ம நபர் நாயகியை பற்றி விசாரிக்கிறார்.
இந்த கதையினை அறிமுக இயக்குனர் ஜோ ஜியோவானி சர்ஜீத் சிங் நடித்து இயக்கியுள்ளார்.
சலீம் பிலால் ஜிதேஷின் ஒளிப்பதிவு பட்ஜெட்டுக்கு என்ன நியாயம் செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கிறது. ஆனால் ஆச்சரியமாக இசை ஒரு சிறந்த தமிழ் படத்துக்குரிய நேர்த்தியுடன் அமைக்கப்பட்டிருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும்.
யாரையும் ஏமாற்றாமல் யாரையும் புண்படுத்தாமல் எந்த தயாரிப்பாளரின் தலையிலும் கை வைக்காமல் தனக்குத் தோன்றியதை செய்து முடித்த ஜோவின் தைரியமும் தன்னம்பிக்கையும் பாராட்டத்தக்கது.