‘ஸ்ட்ரைக்கர்’ – விமர்சனம்
ஒரு கவனக்குறைவால் ஏற்படும் ஒரு தவறால் ஒரு குடும்பமே பாதிக்கப்படுகின்றது என்பதை தெளிவாக சொல்லியிருக்கும் படம் தான் ஸ்ட்ரைக்கர்.
கதையின் நாயகன் ஜோஷி இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு கார் கம்பெனியில் வேலை செய்கிறார். இவர் ஒரு காரை முழுதாக பழுது பார்த்து முடிப்பதற்குள். அந்த காரை டெலிவரி செய்துவிடுகின்றனர், அந்த கார் பிரேக் பிடிக்காமல் விபத்துக்குள்ளாகி காரிலிருந்தவர்கள் இறந்துவிடுகின்றனர். அதை நினைத்து ஜோஷி வருந்திக்கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் அவரின் நண்பர்கள் அமானுஷியமான விஷயங்களை பற்றி சொல்கின்றனர்.
அமானுஷிய விஷயங்கள் மேல் ஆர்வம்கொண்ட இவர் அதனை முழுதாக படித்து தெரிந்துகொள்கிறார். அப்படி ஒருநாள் அவரின் காதலிக்கு அமானுஷிய சம்மந்தமான உதவி செய்ய செல்கிறார். அப்போது அங்கு எதிர்பாராத சம்பவம் நடக்கிறது, அந்த சம்பவத்தினால் ஒரு பிரச்சனையில் ஜோஷியும் , அவரின் காதலியும் மாட்டிக்கொள்கின்றனர். கடைசியில் அந்த பிரச்னையிலிருந்து இவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
![](https://tamil2daynews.com/wp-content/uploads/2023/09/images-14.jpeg)
படத்தில் நாயகன் தனது நடிப்பை மிகச் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார் நாயகி வித்யா பிரதீப்பும் தனக்கு கொடுத்த வேலையை கணக்கச்சிதமாக செய்து முடித்து இருக்கிறார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கஸ்தூரி நடித்திருந்தாலும் அவருக்கு பெரிதாக படத்தில் வேலை இல்லை.
படத்தில் சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் பின்னணி இசை நம்மை மிகவும் கவர்கிறது.
ஒரு சிறிய கவனக்குறைவால் ஏற்படும் பெரிய இழப்பை குறுகிய நேரத்திற்குள் சொல்லி முடித்திருக்கிறார் இயக்குனர்.
வாழ்த்துக்கள்.