பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த ’பார்க்கிங்’ திரைப்படம் செப்டம்பர் 28, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது!
தனது மார்க்கெட்டை ஒவ்வொரு படத்திலும் விரிவுபடுத்தி வரக்கூடிய நடிகர் ஹரிஷ் கல்யாண் வர்த்தக வட்டாரத்தில் ஃபாக்ஸ் ஆஃபிஸ் கஹாநாயகனாக மாறியுள்ளார். அவருடைய ‘பார்க்கிங்’ படம் குறித்தான அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்போது இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஆகியவை படம் செப்டம்பர் 28, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்து இருக்கிறார்கள்.
‘பார்க்கிங்’ படத்தில் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் மற்றும் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் (எடிட்டிங்), என்.கே.ராகுல் (கலை), டி.முருகேசன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), தினேஷ் காசி, ஃபீனிக்ஸ் பிரபு (ஆக்ஷன்), ஷேர் அலி (ஆடைகள்), அப்சர் (நடன இயக்குநர்), யுகபாரதி (பாடல் வரிகள்), டிடிஎம் (விஎஃப்எக்ஸ்), ராஜகிருஷ்ணன் எம்.ஆர். (ஒலி கலவை), சிங்க் சினிமா (ஒலி வடிவமைப்பு), யெல்லோடூத்ஸ் (வடிவமைப்புகள்), ராஜேந்திரன் (ஸ்டில்ஸ்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.