‘அட்டு’ திரைப்பட இயக்குநர் ரத்தன் லிங்காவின் தயாரிப்பில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!
பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் மற்றும் அல்முரியாத் (Bamboo Trees Cinemas & Almuriat) இணைந்து தயாரிக்கும் புரொடக்ஷன் எண் 2 திரைப்படம் திருவள்ளூரில் பூஜையுடன் படப்பிடிப்பு இன்று பிரம்மாண்டமாகத் தொடங்கியது.
‘அட்டு’ திரைப்பட இயக்குநர் ரத்தன் லிங்கா மற்றும் ராஜகுமார் வேலுசாமி தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த புரொடெக்ஷன் எண் 2 திரைப்படத்தினை இயக்குநர் மன்னவராஜன் இயக்குகிறார். இப்படத்தில் லெனின் பாலாஜி ஒளிப்பதிவாளராகவும், நாகராஜன் படத்தொகுப்பாளராகவும், இணைந்திருக்கிறார்கள்.
ரத்தன் லிங்கா ஓர் இயக்குநராக இருந்தாலும் நல்ல கதை சொல்லும் இயக்குநருக்கு வாய்ப்பு வரும் வகையில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
இயக்குநர் மன்னவராஜன் இயக்கும் இத்திரைப்படம் நம் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்ட ஒரு மருத்துவ இனத்தை பற்றிப் பேசுகிறது. ரசிகர்கள் பாராட்டுகளுடன் தேசிய விருதுகளையும் குறி வைத்து இப்படம் உருவாகிறது.