மிரள் – விமர்சனம்
காதல் திருமணம் செய்து தனிமையில் ஒரு மகனுடன் வாழ்ந்து வருகிறார்கள் வரட்டும் வாணி போஜனும்.
ஒரு நாள் தன் கணவரையும், தன்னையும் மர்ம நபர் ஒருவர் கொல்வது போன்ற கனவு வாணி போஜனுக்கு வருகிறது.மேலும் அவர்களை சுற்றி நடக்கும் சில சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த நிலையில் அவர்கள் மூவரும் குலதெய்வம் வழிபாட்டிற்காக சொந்த ஊர் புறப்படுகின்றனர். அதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து மிரள் படத்தை எடுத்துள்ளார் இயக்குனர். குலதெய்வ வழிபாடு முடிந்து தொழில் காரணமாக இல்லம் திரும்ப பரத் முடிவெடுக்கிறார்.

குடும்பத்துடன் அந்த ஊரில் இருந்து புறப்பட்ட பின், ஒரு காட்டில் மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் மூவரையும் வாணிபோஜன் கனவில் வந்த மர்ம நபர் கொல்ல முயற்சிக்கிறார். அது யார்? எதற்காக பரத் குடும்பத்தை கொல்ல நினைக்கிறார்? என்பதை ஹாரர் திரைக்கதை மூலம் கூற முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் சக்திவேல்.
இந்தப் படத்தின் தொடக்கம் நல்ல வகையிலேயே அமைந்துள்ளது. குறைந்த நபர்கள், அவர்களை சுற்றி நடக்கும் மர்மங்கள் என முதல் பாதி நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் கதையை நகர்த்திய விதம் சற்று தொய்வை கொடுக்கிறது. ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில், நடு இரவில் தன் குடும்பத்துடன் மாட்டிக் கொண்டு தவிக்கும் பரத் பேசும் வசனங்கள் படத்திற்கு வலு சேர்க்கவில்லை. ஒரே வசனத்தை மீண்டும் மீண்டும் பேசுவது போல உள்ளது.

மிரள் படத்திற்காக இயக்குனர் எடுத்துக்கொண்ட கதை வித்தியாசமாகவே உள்ளது. ஆனால் அதை திரைக்கதையாக கையாண்டதில் சற்று தடுமாற்றம் தெரிகிறது. இந்த படத்தின் கதைக்கு இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் பார்ப்பவர்களுக்கு மிரளாக இருந்திருக்கும்.
படத்தில் இறுதியாக பாகுபலி திரைப்படத்தின் ஒரு காட்சியில் ஒரு வசனம் படத்தின் ஒட்டுமொத்த கதைக்குமே பொருத்தமாக அமைந்திருப்பது இயக்குனரின் சபாஷ்.
இதில் வரும் திகில் சம்பவங்கள் ஏன் நடந்தன என்பதை ஒரு மெசேஜ் சொல்லி முடித்துள்ளார் இயக்குனர். இந்தப் படம்
பெயரைப் போலவே மிரள வைக்கும்.
விமர்சகர்
சேலம்-சரண்
9994667873