‘ரங்கோலி’ – விமர்சனம்
Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிக்க, ஹமரேஷ், ஆடுகளம் முருகதாஸ், பிரார்த்தனா சந்தீப், , சாய் ஸ்ரீ பிரபாகரன், , அக்ஷயா, அமித் பார்கவ் நடிப்பில் வாலி மோகன்தாஸ் எழுதி இயக்கி இருக்கும் படம் .
அரசு பள்ளியில் நன்றாக படிக்கும் ஒரு மாணவன் அடிக்கடி ரகலையில் ஈடுபடுவதால் தன் மகனை தன் மனைவியின் ஆசைக்காக சில பல லட்சங்கள் செலவு செய்து தனியார் பள்ளியில் சேர்க்கிறார் தந்தை.
சலவை தொழிலாளியாக வரும் ஆடுகளம் முருகதாஸின் நடிப்பை சொல்லவே தேவையில்லை ஒவ்வொரு காட்சியிலும் மனுஷன் மனதில் நிற்கிறார்.
அவரது மனைவியாக வரும் சாய் ஸ்ரீ அடடா இவ்வளவு நாளா எங்கே இருந்தார் என்று கேட்க வைக்கிறது.அந்த வசன காட்சிகளில் ஒவ்வொரு உச்சரிப்பும் தமிழே வித்தியாசமாக தெரிகிறது வாழ்த்துக்கள் சாய் ஸ்ரீ .உங்களுக்கு தமிழ் சினிமாவில் பெரிய இடம் காத்திருக்கிறது.
வட்டி தொழில் செய்பவர்கள் என்றால் அநியாயத்துக்கு இருப்பார்கள் என்று தான் மனதில் தோன்றும் இந்த படத்தில் வருவதோ நியாயமான வட்டிக்காரர் மனதில் பதிகிறார்
சுந்தரமூர்த்தி இசை படத்திற்கு மிகப்பெரிய பக்கபலம் பாடல் காட்சிகள் மனதில் வருடுகிறது.
படத்தில் சொல்லக் கூடிய இரண்டு காட்சிகள் என்றால்.கடற்கரை சாலையில் இரண்டு சக்கர வாகனத்திலும் ஆட்டோவிலும் இவர்கள் வருகிற காட்சியை பார்க்கும் பொழுது நமக்கு பழைய எண்ணங்கள் தோன்றுவது உண்மை.
அதை இன்னும் சற்று குறைத்திருக்கலாம் மாணவர்களின் எதிர்காலம் கருதி.
தமிழ் ஆசிரியர்,மறக்க முடியாத கதாபாத்திரம் பத்தி பக்கபலம் என்று கூட சொல்லலாம்.
மாணவனாக நடித்துள்ள ஹம்ரேஸ்.சினிமா குடும்பத்திலிருந்து வந்த இவர் பந்தா ஏதும் இல்லாமல் படத்தின் காட்சிகளை கதாபாத்திரத்தை உணர்ந்து மிகக் கச்சிதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இன்னும் சொல்லப்போனால் இந்த ஹம்ரேஷ் நடிகர், இசையமைப்பாளர்ஜிவி பிரகாஷ் நினைவுபடுத்துகிறார்.
நிச்சயமாக தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பும் இடமும் காத்திருக்கிறது வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் இயக்குநர் இந்த ரங்கோலி படம் மூலம் சொல்ல வருவது
அரசு பள்ளியில் படித்தால் மாணவர்கள் நன்றாக படிப்பார்களா..!
ஆனால் ஒட்டு மொத்த எல்லோருடைய கருத்தும் படிக்கிற மாணவன் எங்கிருந்தாலும் படிப்பான்.ஏன் வீட்டில் இருந்து தொலைத்தொடர்பு ஆன்லைன் மூலம் படித்தாலும் படிப்பவன் நிச்சயம் ஜெயிப்பான் என்பதே.
இன்றைய தலைமுறைக்கு பழைய தலைமுறைகளை நினைவுபடுத்தும் விதமாக படம் எடுத்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.