‘மூன்றாம் மனிதன்’ விமர்சனம்
ராம்தேவ் தயாரித்து எழுதி இயக்கியிருக்கும் படம் “மூன்றாம் மனிதன்“.
ஒரு காவல்துறை உதவி ஆய்வாளர் கண்டதுண்டமாமாக வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார். அவரை யார் எதற்காக கொல்லப்பட்டார் என்பதை எதிபாராத பல திருப்பங்களுடன் தங்க நகையை அலங்கரிப்பதைப்போல் திரைக்கதையை அலங்கரித்து வெளிவந்திருக்கும் படம்தான்“மூன்றாம் மனிதன்“.
காவல்த்துறை அதிகாரியாக வரும் இயக்குநர் பாகியராஜும் சோனியா அகர்வாலும் தவிர மற்ற எல்லா நடிகர்களும் அறிமுக நடிகர்கள் என்று நம்பவே முடியாதளவுக்கு அருமையாக நடித்துள்ளார்கள்.
அதிலும் லத்தி படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்த நடிகை பிரணா கதாபாத்திரம் அருமை.
இந்த ஒரு சின்ன வயதில் இவ்வளவு அழகாக நடித்திருக்கிறார் பிரணா.
மது பழக்கத்தால் மனைவியை இல்லற வாழ்வில் திருப்திபடுத்த முடியாத கணவன். அதனால் வழிதவறி செல்லும் மனைவி, சந்தேகத்தால் கணவனை இழக்கும் மனைவி, பாசத்தால் கொலைப்பழியேற்கும் இளஞரகள், மனசாட்சியோடு நடத்தப்படும் கொலைக்கான விசாரணைகள் என அனைத்தும் வெவ்வேறு பாதையில் பயணிக்கும் திரைக்கதையை ஒரே புள்ளியில் சங்கமிக்க வைத்த இயக்குநரை பாராட்டாமல் இருக்க முடியாது.
வாழ்வை இனிமையாக்க எதை தவிர்க்க வேண்டும் எதை சேர்க்க வேண்டும் என்பதை கொஞ்சமும் விரசமில்லாமல் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது
இசை படத்திற்கு பக்க பலம்.ஒளிப்பதிவு அபாரம் இயக்கம் சூப்பர்.
பொதுவா நம் வாழ்வில் குறிப்பாக பெண்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது இந்த மூன்றாம் மனிதன் திரைப்படம.
இது மாதிரியான கதையை கையில் எடுத்த படத்தின் இயக்குனரை வெகுவாக பாராட்டியே ஆக வேண்டும்.
மொத்தத்தில் இந்த மூன்றாம் மனிதன் ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய படமே.