‘கள்வன்’ – விமர்சனம்
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் சத்தியமங்கலம் பண்ணாரி வனப்பகுதியையும் வாழ்க்கை முறையையும் சுற்றி எடுக்கப்பட்டுள்ள படம் ‘கள்வன்’.
பாரதிராஜா முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளார்.இயக்குனர் இமயம் நடிப்பு இமயம் ஆகி விட்டார் டைரக்டரே ஒளிப்பதிவும் செய்து விட்டார். கொங்கு மண்டலத்தின் அழகையும், கம்பீரத்தையும் செவ்வனே காட்டியுள்ளார். ஜி. வி பிரகாஷ் பாடல்களின் இசையை விட ரெவா வின் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. கதையில் இன்னும் ஆழமாகவும், திரைக்கதையில் நேர்த்தியும் இருந்திருந்தால் இந்த கள்வனை பலருக்கு பிடிக்க வாய்ப்புள்ளது.
கதை ஓகே. லொகேஷன் ஓகே. ஆர்ட்டிஸ்ட் ஒகே. ஆனால், திரைக்கதை நாட் ஓகே. நிறைய ட்விஸ்ட்களும் நகைச்சுவையும் இருக்க வேண்டிய திரைக்கதையில் இது இரண்டும் இல்லாதது ஒரு குறையே.
படத்தின் மிகப்பெரிய பலமே பாரதிராஜா மற்றும் இவானாவின் நடிப்புதான். அன்பு, பாசத்திற்காக ஏங்கும்போதும், தனது கடந்தகால வாழ்க்கையைச் சொல்லும்போதும், ‘இயக்குநர் இமயம்’ நடிப்பின் இமயமாகி விடுகிறார். அரசு அலுவலகத்தில் காத்திருக்கும் ஒரு காட்சியே போதும், பாரதிராஜா எப்படி இத்தனை நடிகர்களை உருவாக்கினார் என்பதைப் புரிந்து கொள்ள.
திருடனை லவ் பண்றது, ரவுடியை லவ் பண்றது போன்ற விஷயங்களை கொஞ்ச நாளைக்கு தமிழ் சினிமா டைரக்டர்கள் மறந்து இருந்தார்கள். PV ஷங்கர் மீண்டும் இதை கள்வனில் நினைவு படுத்திவிட்டார் என்றே சொல்ல வேண்டும். இயக்குநரே இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மலை, கிராமம், யானை என பல விஷயங்கள் ஒளிப்பதிவில் நன்றாகவே உள்ளன. ரெவாவின் பின்னணி இசையும், Nk ராகுலின் அழகியலாக உள்ளது. திரைக்கதை நேர்த்தியாக இருந்திருந்தால் இந்தக் ‘கள்வன்’ எல்லோருடைய உள்ளத்தையும் கவர்ந்திருப்பான் என்பது நிச்சயம்.