மறைந்த மயில்சாமியின் கடைசி நிமிடங்கள்..!
மயில்சாமி எங்களோடு இரண்டு நாட்களுக்கு முன்பாக அன்பாக பேசி பழகியவர் இன்று இல்லை என்பது எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. விளம்பரம் குறும்பட இயக்குனர் ராகுல் வருத்தம்…
பிப்ரவரி 13 முதல் 16 வரை ஃபிலிம் சிட்டி நடைபெற்ற விளம்பரம் என்ற குறும்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் அவருடன் இணைந்து ரேகா நாயர், சுகைல், இப்ராஹிம்,ராம் மற்றும் பல நடித்தனர்.

இப்படியாக எங்களோடு எம்ஜிஆர் பிலிம் சிட்டியில் பணியாற்றிக் கொண்டிருந்தவர் நான் புதுமுக இயக்குனர் என்றாலும் எனக்கு அனைத்து விதத்தில் ஒத்துழைப்பு தந்தவர் இன்று இல்லை என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்றார் இயக்குனர் ராகுல்..

அவரின் ஆன்மா எங்களை வாழ்த்தட்டும் அவரின் ஆன்மா ஓய்வு பெறட்டும் என்றார்..
இந்த குறும்படத்திற்கு ஒளிப்பதிவு அசோகர்.