ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் அனைத்து பாடல்களையும் தற்போது ஆடியோ ஜூக் பாக்ஸில் நேரலையாக கேட்டு, கண்டு ரசித்து மகிழுங்கள்

by Tamil2daynews
September 7, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் அனைத்து பாடல்களையும் தற்போது ஆடியோ ஜூக் பாக்ஸில் நேரலையாக கேட்டு, கண்டு ரசித்து மகிழுங்கள்

 

ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. அதே தருணத்தில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு… முன்னோட்டம் வெளியான பிறகு அடுத்த கட்டத்திற்கு சென்றது. ஆக்சன் என்டர்டெய்னரான இப்படத்தின் வெளியீடு நெருங்கி வருவதால், அதை அடுத்த கட்டத்திற்கு மேலும் உயர்த்த தயாரிப்பாளர்கள் தங்களுக்கு கிடைத்த எந்த வாய்ப்பையும் தவறவிடவில்லை. தற்போது ஜுக் பாக்சில் அனைத்து சூப்பர் ஹிட் பாடல்களையும் வெளியிட்டு பார்வையாளர்களுக்கு விருந்து அளித்திருக்கிறார்கள்.

‘வந்த எடம்’, ‘ஹய்யோடா’ , ‘ நாட் ராமையா வஸ்தாவையா..’ என ஜவான் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை மேலும் உயர்த்துவதற்காக தயாரிப்பாளர்கள் தற்போது ஜுக் பாக்சில் படத்தின் பாடல்களை வெளியிட்டுள்ளனர். அதில் பார்வையாளர்கள் படத்தின் அனைத்து பாடல்களையும் கேட்டு ரசிக்க முடியும்.
Jawan song Not Ramaiya Vastavaiya OUT: Shah Rukh Khan, Nayanthara flutter hearts in peppy dance track | PINKVILLAஇறுதியாக நீண்ட காத்திருப்பதற்குப் பிறகு தேசம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இத்திரைப்படம் பெரிய திரைக்கு வரவிருக்கிறது. ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் திரையரங்குகளை மைதானங்களை போல் மாற்றி, திரையரங்குகளின் பிரம்மாண்டத்தில் நுழைந்துள்ளது. பார்வையாளர்களிடத்தில் ஜவானுக்கான உற்சாகம் இப்போதும் உச்சத்தில் இருக்கிறது. படம் வெளியாகும் முதல் நாளே திரையரங்குகளில் பார்வையாளர்கள் திரளும் வகையில் புதிய சாதனைகளை படைக்கவும் தயாராக உள்ளது.

ஷாருக்கானின் ஜவான் படத்தின் வெளியீடு என்பது, பார்வையாளர்களுக்கு பிரம்மாண்டமான கொண்டாட்டத்திற்கு குறைவிருக்காது. திரையரங்குகளில் திரளான ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். அனைத்து விசயங்களிலும் இந்த படம் ரசிகர்களின் இதயத்தை வென்று கொண்டிருக்கிறது. படம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியிருக்கிறது. ஆனால் இது ஆரம்பம் மட்டுமே…! அதன் வெற்றிக்கான முன்னுதாரணங்களை உருவாக்கும் பயணத்தில்.. ஜவான் தனது பெயரில் உள்ள சாதனைகளை எவ்வாறு வெல்கிறது என்பதை பார்ப்பது கூடுதல் சுவாரசியமாக இருக்கும்.
Watch: Jawan's new song Zinda Banda is out; Shah Rukh Khan seen in stylish avatar, fans react | Mint‘வந்த எடம்..’ எனத் தொடங்கும் பாடலை அனிருத் ரவிச்சந்தர் இசையில் பாடலாசிரியர் விவேக் எழுத, பாடகர் அனிருத் ரவிச்சந்தர் பாடியிருக்கிறார்.

மென்மையான காதலும் மெல்லிசையுடன் கூடிய ‘ஹய்யோடா..’ எனத் தொடங்கும் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, அனிருத் இசையில், அனிருத் மற்றும் பிரியா மாலி ஆகியோர் இணைந்து அழகாகப் பாடியிருக்கிறார்கள்.

‘நாட் ராமையா வஸ்தாவையா..’ எனத்தொடங்கும் பார்ட்டி பாடலுக்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலை பாடலாசிரியர்கள் விவேக் மற்றும் சைலேந்திரா எழுத, இந்த பாடலை அனிருத் ரவிச்சந்தர், ஸ்ரீ ராமச்சந்திரா மற்றும் ரக்ஷிதா சுரேஷ் ஆகியோர் இணைந்து உற்சாகமாக பாடியிருக்கிறார்கள்.

ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றிருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Previous Post

பிரபாஸ் தொடங்கி வைத்திருக்கும் சமையல் குறிப்பு சவால்

Next Post

இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் நவாசுதீன் சித்திக் இணைந்து நடித்துள்ள, ரிவென்ஜ் டிராமா ‘ஹட்டி’ திரைப்படம் ZEE5 தளத்தில் வெளியாகிறது !!

Next Post

இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் நவாசுதீன் சித்திக் இணைந்து நடித்துள்ள, ரிவென்ஜ் டிராமா ‘ஹட்டி’ திரைப்படம் ZEE5 தளத்தில் வெளியாகிறது !!

Popular News

  • சித்தா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரபலங்கள் வெளியிட்ட தீ – இவன் இசை இன்று முதல்.

    0 shares
    Share 0 Tweet 0
  • 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த ஷாருக்கானின் ‘ஜவான்’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘சித்தா’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

September 27, 2023

“கிரிக்கெட் வீரர் மலிங்காவாக நடிக்க தயார்” ; ஆச்சர்யப்படுத்தும் லால் சலாம் பட ஆடை வடிவமைப்பாளர் சத்யா

September 27, 2023

இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது

September 27, 2023

சித்தா – விமர்சனம்

September 27, 2023

இயக்குநர் அஜய் பூபதியின் ‘செவ்வாய்கிழமை’ திரைப்படம் பான் இந்திய வெளியீடாக நவம்பர் 17ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகிறது!

September 27, 2023

லைக்காவின் ‘சந்திரமுகி 2’ வெளியீட்டிற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துப் பெற்ற ராகவா லாரன்ஸ்

September 27, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!