அமேசான் ப்ரைம் தளத்தில் உலகளவில் புதிய சாதனைகள் படைக்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படம் !!
அமேசான் ப்ரைம் தளத்தில், பிப்ரவரி 9 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான, சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் தனுஷின் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம், 40 நாட்களை கடந்தும், உலகளவில் 9க்குமேற்ப்பட்ட நாடுகளில் டாப் 5 வரிசையில் இடம் பிடித்து, டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது.
வரலாற்றுப் பின்னணியில், ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையப்படுத்திய இப்படத்தில், தனுஷ், பிரியங்கா மோகன் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்திருந்தனர்.
பெரும் நட்சத்திரக் கூட்டணியில், உயர்தர தொழில்நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில், வரலாற்றுப் பின்னணியில் அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் வெளிவந்த இப்படம், திரை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது.
திரையரங்குகளில் வெற்றி பெற்ற கேப்டன் மில்லர் படம், கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் உலகம் முழுக்க ஸ்ட்ரீம் செய்யப்பட்டது. வெளியான முதல் வாரத்திலேயே, உலகம் முழுக்க 14 நாடுகளில் டாப் 5 வரிசையில் இப்படம் இடம்பிடித்து சாதனை படைத்தது. மேலும் இந்தியா உட்பட 9 நாடுகளில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது.