‘இந்த க்ரைம் தப்பில்ல’ – விமர்சனம்
மதுரியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் திரு மனோஜ் கிருஷ்ணசுவாமி அவர்களின் தயாரிப்பில் “இந்த கிரைம் தப்பில்ல’
இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு சமூகத்தில் நடக்கும் பெண்களுக்கு எதிரான அவல நிலைகளை சுட்டி காட்டி இருக்கும் படம் தான் இது.
“இந்த கிரைம் தப்பில்ல” திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் தேவகுமார். இப்படத்தில் நடிகர்கள் ஆடுகளம் நரேன், சின்னத்திரை நடிகர் பாண்டி கமல் மற்றும் கதாநாயகி மேக்னா எலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். குணச்சித்திர வேடங்களில் காமெடி நடிகர் வெங்கால்ராவ், முத்துக்காளை ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

மூன்று காம கயவர்களால் பாதிக்கப்படும் ஒரு பெண்ணிற்கு நீதி கேட்டு நியாயமான முறையில் அல்லாமல் போர் முனையில் நீதி கேட்டு போராட்டம் கதை தான் இது.
படத்தில் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் பெண் பிள்ளைகளை பெற்றது மட்டுமல்லாமல் எப்படி வளர்க்க வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக கூறியிருக்கிறார் இயக்குனர்.
ஆடுகளம் நரேன் நடிப்பு சொல்லத் தேவையில்லை கதையே அவர்தான் என்றாலும் பாராட்டியாக வேண்டும் அவரை.
மேக்னா எலன் பாக்குறதுக்கு தங்கப்பதுமையாக வருகிறார் நடிப்பிலும் அழகிலும் மின்னுகிறார்.

இந்த படத்திற்கு பரிமளவாசன் இசையமைத்திருக்கிறார். ஏ.எம்.எம்.கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். முன்னணி பாடகர்களான பாடகர் பிரசன்னா, பாடகர் வேல்முருகன் ஆகியோர் பாடல்களை பாடி இருக்கின்றனர்.
சிறு சிறு குறைகள் இருந்தாலும் இப்படி ஒரு நல்ல கதையை தர நினைத்த இயக்குனரையும் இதை தயாரித்த தயாரிப்பாளரையும் பாராட்டியாக வேண்டும் .
மொத்தத்தில் ‘இந்த க்ரைம் தப்பில்ல’ இந்த படமும் தப்பில்ல.