பிரைம் வீடியோவின் அடுத்து வரவிருக்கும் அதன் திகில் க்ரைம் டிராமா தொடரான ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இல் இடம்பெற்ற முதுகுத்தண்டை சில்லிடச்செய்யும் இசையை அனுபவியுங்கள்; இசைத் தொகுப்பு இப்போது வெளிவந்துவிட்டது!
நந்தினி ஜே.எஸ் உருவாக்கத்தில், மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ், சுக்தேவ் லஹிரியால் தயாரிக்கப்பட்ட இந்த தமிழ் திகில் க்ரைம் டிராமா தொடரில், நவீன் சந்திரா, சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த இசைத் தொகுப்பில் இடம்பெறும் ஏழு பாடல்கள்களையும் இப்போது அனைத்து இசை ஸ்ட்டீமிங் தளங்களிலும் கேட்டு ரசிக்கலாம்.
‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மார்ச் 29 அன்று வெளியிடப்படவிருக்கிறது.
இணைப்பு :https://open.spotify.com/
மும்பை, இந்தியா- மார்ச் 15, 2024 – இந்தியாவில் மிக அதிகளவில் விரும்பப்படும் பொழுது போக்கு மையமாக திகழும் பிரைம் வீடியோ, இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மார்ச் 29 அன்று வெளியிடப் படவிருக்கும் அதன் தமிழ் ஒரிஜினல் இன்ஸ்பெக்டர் ரிஷி தொடரில் இடம்பெறும் முதுகுத்தண்டை சில்லிடச்செய்யும் இசைத்தொகுப்பை இன்று வெளியிட்டது. அஷ்வத் நாகநாதன் ( Ashwath Naganathan), இசையமைப்பில் உருவான இந்த தொகுப்பில் அதன் டைட்டில் டிராக் உட்பட இந்த திகில் க்ரைம் டிராமா தொடரின் இயற்கைக்கு அப்பாற்பட்ட சிலிர்ப்பூட்டும் கூறுகளை உள்ளடக்கி. அச்சமூட்டும் தொனியுடனான மனதைக் கொள்ளை கொள்ளும் ஏழு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஒட்டுமொத்த இசைத் தொகுப்பும் இன்று முதல் அனைத்து முன்னணி இசை ஸ்ட்ரீமிங் சேவைத் தளங்களிலும் கிடைக்கும்.
அமானுஷ்யமான நிகழ்வுகளோடு பின்னிப்பிணைந்த ஒரு விசித்திரமான தொடர் கொலைகளை விசாரணை செய்து துப்புத் துலக்க தனது வாழ்க்கையையே புரட்டிப்போடும் ஒரு பெருமுயற்சியில் இறங்கும் இன்ஸ்பெக்டர் ரிஷியின் இருண்ட உலகத்திற்குள் இந்த இசைத் தொகுப்பு பார்வையாளர்களை தங்குதடையின்றி அழைத்துச் செல்கிறது பகவதி பி.கே.,(Bagavathy PK,) மஷூக் ரஹ்மான் (Mashook Rahman,) மற்றும் புகழேந்தி கோபால் ஆகியோர் இயற்றிய இந்தத் தொகுப்பில் இடம்பெறும் பாடல்களுக்கு கபில் கபிலன், (Kapil Kapilan,) பாப் ஷாலினி (Pop Shalini), இஷான் நிகாம், (Ishan Nigam i கிறிஸ்டோபர் ஸ்டான்லி (Christopher Stanley), ஆர். அரவிந்த்ராஜ், (R. Aravindraj) பாலாஜி ஸ்ரீ (Balaji Sri,) சௌந்தர்யா.ஆர். தேவூ தெரசா மாத்யூ, ‘உதிரி’ விஜயகுமார், ஸ்ரீராம் க்ருஷ், அஷ்வத் (Ashwath,) ஷைலி பித்வைக்கர், (Shailey Bidwaikar), ஸ்வஸ்திகா ஸ்வாமினாதன், சுனிதா சாரதி (Sunitha Sarathy) மற்றும் அஞ்சனா பாலகிருஷ்ணன் ஆகியோர் குரல் கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டிலுள்ள மர்மங்களால் சூழப்பட்ட ஒரு அழகான கிராமத்தின் பின்புலத்தில் அமைந்த இந்த தொடரின் சாரத்துடன் இந்த இசைத் தொகுப்பு கச்சிதமாக இணைந்து பொருந்துகிறது.
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ஏழு பாடல்கள் இந்தத் இன்ஸ்பெக்டர் ரிஷி இசைத் தொகுப்பில் உள்ளடக்கியுள்ளது :
1. இதயத்தின் மாயம் (தலைப்பு பாடல்) – பாடலாசிரியர்: மஷூக் ரஹ்மான்; பாடகர்: கிறிஸ்டோபர் ஸ்டான்லி
2. கண்ணாடி காதல் – பாடலாசிரியர்: பகவதி பிகே; பாடகர்: கபில் கபிலன், பாப் ஷாலினி
3. உறை பனி நான் – பாடலாசிரியர்: மஷூக் ரஹ்மான்; பாடியவர்: இஷான் நிகாம்
4. காடு – பாடலாசிரியர்: புகழேந்தி கோபால்; பாடகர்: ஆர் அரவிந்த் ராஜ், பாலாஜி ஸ்ரீ, சௌந்தர்யா ஆர், தேவு டிரஸ்ஸா மேத்யூ, ‘உதிரி’ விஜய்குமார், ஸ்ரீராம் கிரிஷ், மற்றும் அஸ்வத்
5. ஹே சகி ஹே – பாடலாசிரியர்: பகவதி பிகே; பாடகர்: ஷைலி பித்வைகர் மற்றும் ஸ்வஸ்திகா சுவாமிநாதன்
6. தொண்டகப்பாறை – பாடலாசிரியர்: பகவதி பிகே; பாடியவர்: சுனிதா சாரதி
7.பரிசுத்த தேவனே – பாடலாசிரியர்: பகவதி பிகே; பாடியவர்: அஞ்சனா பாலகிருஷ்ணன்
நந்தினி ஜே.எஸ் (Nandhini JS,) உருவாக்கத்தில் மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ், சுக்தேவ் லஹிரியால் தயாரிக்கப்பட்ட இந்த இன்ஸ்பெக்டர் ரிஷி தொடரில் நடிகர் நவீன் சந்திரா (Naveen Chandra) கதாநாயகன் வேடத்தில் தோன்ற அவருடன் இணைந்து சுனைனா(Sunainaa), கண்ணா (Kanna) ரவி (Ravi), மாலினி (Malini) ஜீவரத்தினம், (Jeevarathnam) ஸ்ரீகிருஷ்ண தயாள்(Srikrishna Dayal,) மற்றும் குமரவேல் (Kumaravel) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.