ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘ரத்தம்’ – விமர்சனம்

by Tamil2daynews
October 7, 2023
in விமர்சனம்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘ரத்தம்’ – விமர்சனம்

விஜய் ஆண்டனி நடித்து சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் ரத்தம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. விஜய் ஆண்டனி, நந்திதா ஸ்வேதா, மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். கண்ணன் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கோமல் போஹ்ரா, பங்கஜ் போஹ்ரா, தனஞ்சயன் ஆகியவர்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள்.

தீவிரமான ஒரு சமூக பிரச்சனையை சுவாரஸ்யமான ஒரு படமாக மாற்ற முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சி.எஸ்.அமுதன். சாதி, மதம், மொழி, வர்க்கம் , அதிகாரம் , கோபம் என பல காரணங்களுக்காக மனிதர்கள் கொலை செய்கிறார்கள். ஆனால் இந்த கொலைகளை அவர்கள் தானாக செய்கிறார்களா? இல்லை குற்றவாளிகளாக இருக்கும் அவர்களே யாரோ ஒருவரின் சுயலாபத்திற்காக பயன்படுத்தப்படும் பலியாடுகளா? என்பதே இப்படத்தின் கதையாகும் .
Ratham Movie Stills | Chennaionline

பிரபல பத்திரிக்கை நிறுவனத்தில் பத்திரிகையாளர் செழியன் என்பவரை அடையாளம் தெரியாத ஒரு இளைஞர் கொலை செய்கிறார். தனது தலைவரைப் பற்றி செய்தி எழுதியதற்காக தான் இந்த கொலையை செய்ததாக தனது செயலை நியாயப்படுத்துகிறான் கொலையாளி. இந்த கொலையை அந்த இளைஞர் ஏன் செய்கிறார் என்கிற புதிரில் இருந்து தொடங்கும் கதை மெல்ல நமது கதாநாயகன் ரஞ்சித் குமாரை (விஜய் ஆண்டனி) நோக்கி நகர்கிறது.

ஒரு காலத்தில் உலக அளவில் புகழ்பெற்ற புலனாய்வு பத்திரிகையாளராக இருந்த ரஞ்சித் தற்போது தனது மகளுடன் கொல்கத்தாவில் வசித்து வருகிறார். தனது மனைவி இறந்துவிட்ட  குற்றவுணர்ச்சியால் தீவிர மதுபோதைக்கு அடிமையாகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் மீண்டும் தனது வேலைக்குத் திரும்பும் ரஞ்சித் மர்மமான முறையில் நடக்கும் இந்த கொலைகளை செய்பவர்களை தேடிக் கண்டுபிடிப்பதே படத்தின் கதை.
Vijay Antony Raththam Movie Images HDவழக்கமான ஒரு கிரைம் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருக்கும் ரத்தம் திரைப்படம் தீவிர சமூகப் பிரச்சனைகளை எப்படி ஒரு கும்பல் தங்களுடைய தனிப்பட்ட ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறது என்பதைப் பற்றிய படமாக உருவாகி இருக்கிறது. இந்த வில்லன் கூட்டத்தின் தலைவராக இருக்கும் மஹிமா நம்பியார் க்யூட்டான ஒரு கொடூர வில்லியாக நடித்திருக்கிறார்.
நல்ல ஒரு கதையை கொண்டிருந்தாலும் அதை சராசரிக்கும் குறைவான சுவாரஸ்யத்தில் எடுத்திருக்கிறார் சி.எஸ் அமுதன். இந்த கொலைகளை எல்லாம் செய்பவர்களின் நோக்கம் என்ன என்பதை சொல்லாமலே சாமர்த்தியமாக கடந்துசென்று விடுகிறார். ஒன்றன் பின் ஒன்றாக சுவாரஸ்யம் இல்லாத காட்சிகள் வந்தபடி இருக்கின்றன. எல்லா காட்சிகளும் ஏற்கனவே நாம் பார்த்த வேறு ஒரு படத்தை நியாபகப் படுத்துகின்றன. நடிப்பாக விஜய் ஆண்டனியின் வழக்கமான சைலண்ட் ட்ரீட்மெண்ட் பெரிதாக வர்க் அவுட் ஆகவில்லை.
Vijay Antony Raththam Movie Images HDநந்திதா ஸ்வேதா, நிழல்கள் ரவி , ரம்யா நம்பீசன் உல்ளிட்டவர்கள் நன்றாக நடித்திருந்தாலும் வெளிச்சம் படும் அளவிற்கு சிறப்பான கதாபாத்திரங்கள் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. பல சமயங்களில் மொத்தமாக கலர் மீன்களை வாங்கிவந்து குட்டி தொட்டிக்குள் போட்டது போல் ஒரே இடத்திற்கும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் கதாபாத்திரங்கள்.

குறைவான பாடல்கள் என்றாலும் படத்தில் பின்னணி இசை கவனம் ஈர்க்க தவறுகிறது.

படத்தின் தலைப்பை பார்த்தால்  வன்முறை தெரிப்பதை குறிக்கும் வகையில் “ரத்தம்” என டைட்டில் வைத்தாலும் உள்ளே அதற்கான எந்த தடயமும் பெரிய அளவில் இல்லை என்பதே உண்மை.

மொத்தத்தில் இந்த ‘ரத்தம்’ ஒரு கலவையான கலப்பட ரத்தமே..!
Tags: 'ரத்தம்' - விமர்சனம்RATHAM MOVIE REVIEWRATHAM MOVIE STILLSRATHAM MOVIE VIJAY ANTONY
Previous Post

‘தி ரோடு’ – விமர்சனம்

Next Post

டப்பாங்குத்து’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

Next Post

டப்பாங்குத்து' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

Popular News

  • படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் ஆண்டனி! வெளியானது ட்ரைலர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பேத்கர் பாரதீய தலித் சாஹித்ய அகாடமி விருது வென்ற தமிழ் மற்றும் மலையாள இயக்குநர் பைஜு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • Working on the sets of Thambi was a lot of fun: Suraj Sadanah

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சந்தீப் ரெட்டி வங்கா, ரன்பீர் கபூர் கூட்டணியின் “அனிமல்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

November 28, 2023

‘காந்தாரா -சாப்டர்1’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியீடு

November 28, 2023

’லேபிள்’ வெப்சீரிஸை தொடர்ந்து புதிய வெப்சீரிஸில் நடிக்கும் அரிஷ் குமார்

November 28, 2023

படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

November 28, 2023

பான் இந்தியா ஆக்ஷன் படமாக கவனம் ஈர்க்கும் ஹரோம் ஹரா

November 28, 2023

அம்பேத்கர் பாரதீய தலித் சாஹித்ய அகாடமி விருது வென்ற தமிழ் மற்றும் மலையாள இயக்குநர் பைஜு !!

November 28, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!