• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“ஹர ஹர மகாதேவ்!”: தேரே இஷ்க் மே படத்திற்காக வாரணாசியில் தனுஷ்.. க்ரிதி சனோனுடன் பகிர்ந்த ஸ்பெஷல் படங்கள்!

by Tamil2daynews
November 28, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“ஹர ஹர மகாதேவ்!”: தேரே இஷ்க் மே படத்திற்காக வாரணாசியில் தனுஷ்.. க்ரிதி சனோனுடன் பகிர்ந்த ஸ்பெஷல் படங்கள்!

இயக்குநர் ஆனந்த் L ராய் இயக்கத்தில், தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேரே இஷ்க் மே’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பூஷன் குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் முன்பதிவு நாடு முழுவதும் அமோகமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம், ரசிகர்கள் இந்த படத்தை காண எவ்வளவு ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

இந்த உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாரணாசியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். படக்குழுவினர் அங்கு விளம்பர பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில், தனுஷ், க்ரிதி சனோன் மற்றும் இயக்குநர் ஆனந்த் L ராய் ஆகியோர் காசியில் படகில் பயணம் செய்து கொண்டே சிரித்து பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மூவருக்கும் இடையே உள்ள இயல்பான நட்பும், மகிழ்ச்சியான தருணங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த புகைப்படங்களை பகிர்ந்து தனுஷ், “அவரது காலடியில் இருக்கும்போது இந்த உலகம் சிறந்த இடமாக இருக்கிறது. ஹர ஹர மகாதேவ். #banaraslove” என்று பதிவிட்டுள்ளார். படம் வெளியாகும் முன்பு, புனித நகரமான வாரணாசியில் ஆசி பெறும் அவரது மனநிலையை இந்த பக்திப்பூர்வமான வரிகள் அழகாக பிரதிபலிக்கின்றன.

குல்ஷன் குமார், T-சீரிஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனங்கள் வழங்கும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தை ஆனந்த் L ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா தயாரிக்க, பூஷன் குமார் மற்றும் கிருஷண் குமார் இணைந்து தயாரித்துள்ளனர். ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதிய திரைக்கதையுடன் ஆனந்த் L ராய் இயக்கியுள்ள இப்படம், AR ரஹ்மான் இசையமைப்பில், ஈர்ஷாத் காமில் பாடல் வரிகளுடன் உருவாகியுள்ளது. தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வரும் நவம்பர் 28, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Link: https://www.instagram.com/p/DRhXrOLATXO/?igsh=MTA3czJhZTZwc2tqcQ==

Previous Post

ரேகை – விமர்சனம்

Next Post

உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’ படத்தின் புதிய டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிலிக்ஸ்!

Next Post

உளவியல் த்ரில்லர் கதையான 'ஸ்டீபன்' படத்தின் புதிய டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிலிக்ஸ்!

Popular News

  • ‘ப்ராமிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் : இயக்குநர் சேரன் மற்றும் நட்டி வெளியிட்டனர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிளாக்பஸ்டர் படமான ‘நெலும் குலுனா’ (டென்டிகோ) / ‘பெருசு’ படத்தின் இயக்குநர் இளங்கோ ராம், எஸ்டோனியாவில் நடைபெறும் ‘ஏ’ லிஸ்ட் திரைப்பட விழாவின் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • யாரு போட்ட கோடு’ திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிறை’ படத்தின் முதல் சிங்கிள் ‘மன்னிச்சிரு’ பாடல் இன்று வெளியானது !

    0 shares
    Share 0 Tweet 0
  • IPL – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் ‘பெத்தி’ படத்தின், மிக முக்கியமான சண்டைக் காட்சி, பிரம்மாண்ட செட்டில், பாலிவுட்டின் பிரபல ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் படமாகிறது !!

November 30, 2025

‘சிறை’ படத்தின் முதல் சிங்கிள் ‘மன்னிச்சிரு’ பாடல் இன்று வெளியானது !

November 30, 2025

பிளாக்பஸ்டர் படமான ‘நெலும் குலுனா’ (டென்டிகோ) / ‘பெருசு’ படத்தின் இயக்குநர் இளங்கோ ராம், எஸ்டோனியாவில் நடைபெறும் ‘ஏ’ லிஸ்ட் திரைப்பட விழாவின் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்!

November 30, 2025

‘ப்ராமிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் : இயக்குநர் சேரன் மற்றும் நட்டி வெளியிட்டனர்!

November 30, 2025

IPL – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

November 30, 2025

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game)’பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

November 29, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.