ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகம் திறப்பு

by Tamil2daynews
August 13, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகம் திறப்பு

 

சென்னை கே.கே.நகர், முனுசாமி சாலையில் அமைந்துள்ள டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தகைசால் தமிழர், தோழர் ஆர் நல்லகண்ணு அவர்கள் தலைமையில், பத்மபூஷண் கவிப்பேரரசு வைரமுத்து ஆகஸ்ட் 12 அன்று திறந்து வைத்தார்.

இவ்விழாவிற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வருகை தந்தது பெரும் ஊக்கமாக அமைந்தது.

மிக சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பலதரப்பட்ட எழுத்தாளர்கள், இயக்குநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
விழா துவங்குவதற்கு முன்பு நல்லகண்ணு அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன், தான் தினமணி பத்திரிகையின் முதல் ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களின் பேரன் என்ற தகவலை அவரிடம் தெரிவித்தார். Z
தமது பேச்சில் இதை பற்றி குறிப்பிட்ட நல்லகண்ணு, சுதந்திர போராட்ட வீரரும் மாபெரும் பத்திரிகையாளருமான டி.எஸ்.சொக்கலிங்கத்தின் வம்சாவளியை சேர்ந்தவரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

வாசிப்பு சார்ந்த முன்னெடுப்பை டிஸ்கவரி புக் பேலஸ் துவங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று வைரமுத்து கூறினார்.

உலகளவில் ஜப்பான், இங்கிலாந்து, சீனாவை விட இந்தியர்கள் ஒரு வாரத்தில் அதிக நேரம் வாசிப்பு பழக்கம் கொண்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வளாகத்தின் முதல் தளத்தில் 1500 சதுர அடியில், 80 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட ஓவியக் கூடத்தை எழுத்தாளர் சி மோகன் தலைமையில் மூத்த ஓவியர் சிற்பி முருகேசன் அவர்களும், ஓவியர் விஸ்வம் அவர்களும் இணைந்து திறந்து வைத்தனர்.

இத்துடன், 30 பேர் வரை அமரக்கூடிய திறந்தவெளி அரங்கம் ஒன்றும் உள்ளது. இந்த வளாகத்தை பார்த்த அனைவரும் வெகுவாக பாராட்டினர்.
தொடர்ந்து தமிழ் சூழலில் வாசிப்பு சார்ந்து முன்னெடுப்புகளை டிஸ்கவரி புக் பேலஸ் எடுக்கும் என்று அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். வாசகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Previous Post

“முதல் பாகத்தில் ஏமாற்றினார்கள்.. இப்போது திருப்தி” ; ஜீவி-2 நாயகி அஸ்வினி சந்திரசேகர் ஓபன் டாக்

Next Post

கொலை திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

Next Post

கொலை திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் M.மணிகண்டன் கூட்டணியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடியான வெப் சீரிஸை அறிவித்துள்ளது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • யாரும் செல்லாத இடம் எங்கும் சொல்லப்படாத மக்கள் பற்றிய கதைதான் ‘கன்னி’.

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமான “அகிலன்”  தற்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 

    0 shares
    Share 0 Tweet 0
  • இளையராஜா முன்னிலையில் பூஜையுடன் தொடங்கிய புதிய படம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமான “அகிலன்”  தற்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 

April 1, 2023

விடுதலை பாகம்1- விமர்சனம்

April 1, 2023

நடிகர் மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் ‘மை டியர் டயானா’ எனும் இணையத் தொடரின் படப்பிடிப்பு துவக்கம்

April 1, 2023

பத்து தல – விமர்சனம்

April 1, 2023

இளையராஜா முன்னிலையில் பூஜையுடன் தொடங்கிய புதிய படம்.

April 1, 2023

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் M.மணிகண்டன் கூட்டணியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடியான வெப் சீரிஸை அறிவித்துள்ளது !!

April 1, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!