‘மூத்தகுடி’ – விமர்சனம்
குடிப்பழக்கத்தால் குடும்பங்கள் அழிவது மட்டுமல்லாமல் உயிர்கள் நிறைய பலியாகின்றன என்பதால் ஒரு ஊரில் குடிப்பழக்கமே இருக்கக் கூடாது என்கிற கருத்தை வலியுறுத்து படமே மூத்த குடி.
இப்படி ஒரு சட்டம் போட்டு விட்டதால் இதற்கு எதிராக ஒருவர் வேண்டுமல்லவா அவர்தான் வில்லன் நடிகர் ராஜ்கபூர்.
மது அருந்தும் பழக்கமே இல்லாத அந்த ஊரில் ஒரு மது ஆலையை கட்ட நினைக்கிறார் வில்லன் அதற்கு அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் ஊர் தலைவியும் உட்பட ஆனால் இவர் விரிக்கும் சதி வலையில் யாரெல்லாம் சிக்கினார்கள் யாரெல்லாம் பலியானார்கள் என்பதே படத்தின் கதைக்களம்.
திமிரு படத்தின் மூலம் மிகப் பெரிய இயக்குனராக வருவார் என்று கணக்கு போட்ட நடிகர் தருண் கோபி படத்தில் முக்கிய இடத்தில் நடித்துள்ளார் முதலில் நல்லவர் போல் வரும் அவர் பிற்பாதியில் வில்லன் போல் ஆகிறார் மறுபடியும் படத்தின் இறுதிக் காட்சியில் திருந்துகிறார்.
அந்த ஊரையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஊர் பெரிய மனுசியாக கே ஆர் விஜயா நடித்திருக்கிறார் பல நாட்களுக்குப் பிறகு அவரை திரையில் பார்த்த சந்தோஷம்.
ஊர் பெரிய மனுஷியோட வரும் யார் கண்ணன் கதாபாத்திரமும் ரசிக்க வைக்கிறது.
ஆர் சுந்தர்ராஜன் சிங்கம்புலி காமெடி காட்சிகள் கலகல.
ஒளிப்பதிவு படத்தின் பக்கபலம்.
இசை ஒரு பாடல் மனதை வருடுகிறது.
படத்தில் சின்ன சின்ன குறைகள் இருக்கின்றது.