• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் “தி வாரியர்” படத்தின் மாஸ் டிரெய்லரை கண்டுகளியுங்கள்!

by Tamil2daynews
July 2, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில்  “தி வாரியர்” படத்தின் மாஸ் டிரெய்லரை கண்டுகளியுங்கள்!


நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் வரவிருக்கும் அதிரடி படமான “தி வாரியர்” படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தை N லிங்குசாமி இயக்கியுள்ளார்,  இப்படம் ஜூலை 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த இருமொழி திரைப்படத்தை ஸ்ரீனிவாசா சிட்துரி தனது தயாரிப்பு நிறுவனமான Srinivasa Silver Screen சார்பில் தயாரித்துள்ளார். பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார்.
படத்தினை அடுதடுத்து அசத்தலான விளம்பரங்கள் மூலம் ரசிகர்களிடம் ஆர்வத்தை அதிகப்படுத்தி வருகின்றனர் படக்குழுவினர். ஏற்கனவே வெளியான சார்ட்பஸ்டர் பாடல்கள் யூடியூப்பில் மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ளது. ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பு படத்தின் டீஸர் வெளியிடப்பட்ட நிலையில், அது  பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் குழுவினர் நேற்று தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் அசர வைக்கும் ஆக்சன் தெறிக்கும் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். அனந்தபூரில் நடந்த வெளியீட்டு விழாவில் “தி வாரியர்” படத்தின் மாஸ் ட்ரெய்லரை, மாஸ் டைரக்டர் போயபதி ஸ்ரீனு வெளியிட படக்குழுவினர் கொண்டாடினர். தமிழ் டிரெய்லரை நடிகர்  சிவகார்த்திகேயன்  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த டிரெய்லரில், ராம் பொத்தினேனி மற்றும் ஆதி பினுஷெட்டி ஆகியோர் தங்களது முழு பங்களிப்பையும் வழங்கி, திறமையான  நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதை காணலாம். ராம் பொத்தினேனியின் பிரம்மாண்டமான தோற்றம் மற்றும் ஆதியின் முரட்டுத்தனமான மற்றும் இரக்கமற்ற தோற்றம் ஆகியவை YouTube இல் ஒரு தீப்புயலைத் தூண்டியிருக்கிறது. மீதமுள்ள விவரங்களை அறிய நீங்கள் தி வாரியர் டிரெய்லரை பார்த்து அனுபவிக்க வேண்டும்.
N லிங்குசாமி இயக்கிய இப்படம் ஜூலை 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. கோலிவுட் மற்றும் டோலிவுட் இரண்டிலும் தனது திறமையை நிரூபித்த ஆதி பினுசெட்டி இந்த ஆக்‌ஷன் என்டர்டெய்னரில் வில்லனாகவும், கீர்த்தி ஷெட்டி நாயகியாகவும்  நடிக்கிறார்கள். இப்படத்தில் அக்ஷரா கவுடா, நதியா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, அன்பறிவு மாஸ்டர்கள் மற்றும் விஜய் மாஸ்டர் ஆக்‌சன் பணிகளை செய்துள்ளனர்.
Previous Post

தனுஷ் நடிப்பில் சத்ய ஜோதியின் “கேப்டன் மில்லர்”

Next Post

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோஹர், சார்மி கவுர் ஆகியோரின் LIGER (Saala Crossbreed) திரைப்படத்திலிருந்து ஒரு அசத்தலான, மிரட்டல் போஸ்டர் வெளியாகியுள்ளது !

Next Post

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோஹர், சார்மி கவுர் ஆகியோரின் LIGER (Saala Crossbreed) திரைப்படத்திலிருந்து ஒரு அசத்தலான, மிரட்டல் போஸ்டர் வெளியாகியுள்ளது !

Popular News

  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

    0 shares
    Share 0 Tweet 0
  • பெங்களூர் மெட்ரோவில் முதன்முறையாக ஒரு நட்சத்திர பிறந்தநாள் கொண்டாட்டம் – ராக்கிங் ஸ்டார் யாஷ் ரசிகர்களின் வரலாற்றுச் சாதனை !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.