டார்க் லைட் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுப்பிரமணியன்.எஸ் தயாரிப்பில், அப்பு கே.சாமி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு ஹீரோவாகவும் நடித்திருக்கும் படம் ‘ஜான் ஆகிய நான்’. 311 OTT மற்றும் 311channel.com என்ற இணையத்தில் நேரடியாக வெளியாகியிருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது? விமர்சனத்தை பார்ப்போம்.
ஒரு கிராமத்தில் 44 பேர் கொலை செய்யப்படுகிறார்கள். யாருக்கும் தெரியாத அந்த கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து தொலைக்காட்சி ஒன்றில் அந்த கிராமத்தை சேர்ந்த டொச்சு பாண்டி -அருள் அன்பழகன் விவரிக்கிறார். எதற்காக 44 பேர் கொல்லப்பட்டார்கள்?, கொலை செய்யப்பட்டவர்கள் யார்?, கொலை செய்தது யார்? போன்ற கேள்விகளுக்கு அருள் அன்பழகன் கொடுக்கும் பதில்கள் உண்மையா? என்பதை ஆராயாமல் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்வதோடு, அந்த வழக்கில் சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரியான நாயகன் அப்பு கே.சாமியிடம் விளக்கம் கேட்கிறது.
ஆனால், அன்பழகன் கூறிய தகவல்கள் அனைத்தும் பொய் என்பதை தெரிந்துக்கொள்ளும் அப்பு கே.சாமி, களத்தில் இறங்கி கொலை சம்பவத்தின் உண்மையான பின்னணி என்ன? என்பதை வித்தியாசமான முறையில் விவரிப்பது தான் ‘ஜான் ஆகிய நான்’.
டொச்சு பாண்டி என்ற வேடத்தில் நடித்திருக்கும் அருள் அன்பழகன் ஆரம்பத்தில் அப்பாவியாக தொலைக்காட்சி பேட்டியில் பேசிவிட்டு, பிறகு தனது விஸ்வரூபத்தை காட்டும் எதிர்பாராத திருப்ப காட்சிகள் அதிர்ச்சியளிக்கிறது.
அவ்வப்போது இப்பட ஆரம்பத்தில் காமெடி என்ற பெயரில் பவர் ஸ்டார் சீனிவாசன் மொக்கை போடுகிறார். இரண்டு காட்சிகளில் மட்டுமே அவர் வருவதால் ரசிகர்கள் தலை தப்பித்தது.
நாயகியாக ஹேமா எனும் பாத்திரத்தில் நடித்திருக்கும் நக்ஷத்ரா ராவ் , பக்கத்து வீட்டு பெண் போன்று எளிமையாக இருக்கிறார். ஆனால், அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு ஆக்ஷன் படங்களில் கதாநாயகியருக்கு கொடுக்கப்படும் குறைந்த பட்ச வாய்ப்பு தான் என்றாலும் இதில் ரொம்பவே ஐயோ பாவம் நாயகியாக தெரிகிறார் அம்மணி.
ராஜநாயகம் என்ற பெரிய மனித கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஜாக்சன் பாபு, காமெடி வில்லனாக சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், பல இடங்களில் தனது இயல்பான வில்லத்தனத்தால் கவனிக்க வைக்கிறார்.
மருத்துவராக வரும் நிழல்கள் ரவி, ஒரு காட்சியில் வந்தாலும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். ஜான் என்ற தொழிலதிபராக நடித்திருக்கும் ஆதேஷ் பாலா , தன் அனுபவ நடிப்பால் தான் ஏற்ற சில நிமிட கதாப்பாத்திரத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.
நிழல்கள் ரவி, பவர் ஸ்டார் , ஆதேஷ் பாலா ஆகியோரை தவிர படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் பெரும்பாலான நடிகர்கள் புதுமுகங்களாக இருக்கிறார்கள். அவர்களால் இயன்ற அளவுக்கு நடிக்கவும் முயற்சித்திருக்கிறார்கள்.
கவியரசனின் ஒளிப்பதிவு மற்றும் 311 ஸ்டுடியோஸின் இசை, படத்தொகுப்பு கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது.
கதை எழுதி இயக்கியிருப்பதோடு ஹீரோவாகவும் நடித்திருக்கும் அப்பு கே.சாமி, வழக்கமான பழிவாங்கும் கேங்ஸ்டர் கதையை வித்தியாசமான முறையில் சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அவர் சொல்லிய விதம் வித்தியாசமாக இருப்பதை காட்டிலும் சற்றே புரியாதபடியும் இருப்பது தான் கொஞ்சம் அல்ல நிறையவே குறையாக தெரிகிறது.
சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட இளைஞர்களை சமூக விரோத கும்பல்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கிறது ? என்பதையும், ஊடகங்களில் வெளியாகும் பொய் எப்படி ..? உண்மையாகி விடுகிறது என்பதையும் மிக அழுத்தமாக சொல்லியிருப்பதோடு, சமூக அக்கறையோடு வசனங்கள் எழுதியிருக்கும் இயக்குநர் அப்பு கே.சாமி, அதை இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம்.
வித்தியாசமான முயற்சி , ரிவர்ஸ் டெக்னிக் , இன்னும் இன்னும் எண்ணற்ற புதுமைகள்… என விறுவிறுப்பாக படம் எடுக்க முயன்றிருக்கும்… இயக்குநர் அப்பு கே.சாமி, அதை எளியோருக்கும் புரியும்படி இன்னும் சற்றே கூடுதல் கவனம் செலுத்தி எடுத்திருந்தால் ‘ஜான் ஆகிய நான்’ ரசிகர்கள் ஆகிய எல்லா தரப்பு மக்களுக்கும் புரிந்திருக்கும் ! இன்னும் கூடுதலாக பிடித்திருக்கும் !!
user name & Password ஐ பயன்படுத்தி அதில் பணம் செலுத்த வேண்டிய இடத்தில் கீழ்காணும் Free purchase coupon code : 5555 ஐ பயன்படுத்தினால் நீங்களும் Free of cost-ல்: ’ஜான் ஆகிய நான்’ திரைப்படத்தை கண்டு களிக்கலாம்.
password : 270820222000