• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் 1 கோடி பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்த “உடன்பால்” திரைப்படம் !!

by Tamil2daynews
January 8, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் 1 கோடி பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்த “உடன்பால்” திரைப்படம் !!

 

ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில், டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில்,  நடிகர்  சார்லி நடிப்பில் சமீபத்தில் வெளியான “உடன்பால்” திரைப்படம் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, 1 கோடி பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
 டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில், சார்லி, ‘சேதுபதி’ பட புகழ் நடிகர் லிங்கா, நடிகை காயத்ரி, நடிகை அபர்னதி, விவேக் பிரசன்னா, KPY தீனா, நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் நடிப்பில் ஆஹா தளத்தில் வெளியான திரைப்படம் “உடன்பால்”.
குடும்ப பின்னணியில் இன்றைய சமூகத்தில்  உறவுகள் பணத்திற்காக எந்த எல்லை வரை செல்கிறார்கள் என்பதை அற்புதமான ப்ளாக் காமெடியில் சொல்லியிருந்தது இந்த திரைப்படம்.  மேலும் இன்றைய சமூகத்தில்
நம் தாய்தந்தையரிடம் நாம் எவ்வாறு நடந்த கொள்ள வேண்டும் என்பதை அழுத்திச் சொல்லியுள்ளது இப்படம்.
விமர்சகர்களின் பாராட்டை குவித்த இப்படம், குடும்ப பார்வையாளர்களின் பெரும் வரவேற்பில் ஆஹா தமிழ் தளத்தில் 1 கோடி நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழுவினர்  ஆஹா தளத்தின் குழுவினரோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும் ரசிகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் நன்றியினை தெரிவித்துள்ளனர்.
நேர்த்தியான குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளின் கலவையும் இணைந்து உருவாகியிருந்த “உடன்பால்”  படத்தின் ஒளிப்பதிவை மதன் கிறிஸ்டோபர் செய்திருந்தார்,  சக்தி பாலாஜி இசையமைக்க, கலை இயக்கத்தை எம் எஸ் பி மாதவன் செய்திருந்தார், படத்தொகுப்புப் பணிகளை ஜி. மதன் செய்திருந்தார்.
தமிழ் மொழிக்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஆஹா டிஜிட்டல் தளத்தில் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் ஒரிஜினல் திரைப்படங்கள், ஒரிஜினல் வலைதளத் தொடர், ஒரிஜினல் நிகழ்ச்சிகள், என பல அசலான ,தமிழர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு அம்சங்களை, உள்ளூர்  திறமைசாலிகளுடன் இணைந்து வழங்கி வருகிறது.  இத்தளத்தில் வெளியான ‘மாமனிதன்’, ‘குருதி ஆட்டம்’, போன்ற தமிழ் திரைப்படங்கள், ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனையை படைத்தது. சமீபத்தில் வெளியான  ‘ஜீவி’, ‘ஜீவி 2’ படங்கள் மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்த நிலையில் தற்போது உடன்பால் படம் 1 கோடி பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது.  வருகிறது. உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவீத பிரத்தியேக பொழுதுபோக்கு அம்சங்களை அனைவரும் ரசிக்கும் வகையில் தந்து வருகிறது ஆஹா தமிழ் தளம் .
Previous Post

“ வாத்தி “ விநியோக உரிமை சர்ச்சை

Next Post

PV ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ்- பாரதிராஜா- இவானா நடிக்கும் ‘கள்வன்’

Next Post

PV ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ்- பாரதிராஜா- இவானா நடிக்கும் 'கள்வன்'

Popular News

  • அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.