விஜய் தேவரகொண்டா – சமந்தா நடிப்பில் உருவான ‘குஷி’ படத்தின் ஐந்தாவது பாடல் வெளியீடு
விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘குஷி’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘என் பொன்னம்மா..’ எனத் தொடங்கும் ஐந்தாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சிவ நிர்வானாவின் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா- சமந்தா நடித்திருக்கும் ‘குஷி: எனும் பான் இந்திய காதல் நாடக திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதிமன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது. காதல் மற்றும் மனதை வருடும் பாடல்களால் இப்படம் ஏற்கனவே ட்ரெண்டிங்கில் உள்ளது. அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்படத்தின் பிரத்யேக இசை நிகழ்ச்சி, மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தப் பாடல் அனைத்து மொழிகளிலும் உடனடியாக பிரபலமாகும். ‘குஷி’ மிகவும் எதிர்பார்க்கப்படும் காதலை மையப்படுத்திய திரைப்படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தினை பெரிய திரைகளில் கண்டு ரசிக்க பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியுடன் ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, சரண்யா பொன்வண்ணன், ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல்லா வஹாப் இசையமைத்திருக்கிறார்.