வெளிநாட்டு பயணம் டூ படப்பிடிப்பு தளம் இடையில் நோ ரெஸ்ட் கலக்கும்
நடிகர் விஷால்…
சமீபத்தில் நடிகர் விஷால் அவர்கள் வெளிநாட்டில் (USA) இருந்து வந்தவுடனே மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவு இடத்தில் மரியாதை செலுத்தியும் அதன்பிறகு அவரின் இல்லத்திற்கு சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி இருந்தார்.
அதன் பின் அன்று மாலையே இயக்குனர் ஹரி அவர்களின் இயக்கத்தில் ‘ரத்னம்’ படப்பிடிப்பிற்காக திருப்பதி சென்று தயாரிப்பு தரப்பினர் மூன்று நாட்களுக்கு திட்டமிட்டு இருந்த படப்பிடிப்பை நடிகர் விஷால் அவர்களின் ஒத்துழைப்பில் இரண்டே நாட்களில் முடித்து கொடுத்துள்ளார்.
விஷால் அவர்களின் இந்த செயல்பாடு அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று தயாரிப்பாளருக்கு ஒரு நாள் படப்பிடிப்பிற்கு ஆகும் 30லட்சம் செலவை சேமித்து கொடுத்துள்ளார்.
‘ரத்னம்’ திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முழுவிச்சில் நடைபெற்று இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.