ரஜினி, ரஜினி தான்..! என்றுமே ராஜா நீ ரஜினி..! என்று ஒரு பாடலில் வரும் வரிகளில் இருப்பது நிதர்சன உண்மை.
ஒரு வழியாக ஜெயிலர் முதல் Week end முடிந்துவிட்டது.. 100 ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் இந்த நான்கு நாட்கள் வசூலில் அனைத்து படங்களின் ஓப்பனிங் கலெக்சனையும் முறியடித்து just behind 2.0 வில் வந்து நிற்கிறது..அதாவது நான்கு நாட்களில் 320+ கோடிகள்.. 2.0 வையும் அடிக்க வேண்டியது.. ஹிந்தி ரிலீசில் சன் பிக்சர்ஸ் சொதப்பிவிட்டார்கள்.. கடந்த 12 வருடங்களாக ரஜினியை கோலிவுட் மக்கள் மிக மிக குறைத்து மதிப்புட்டுவிட்டார்கள்.. குறைத்து மதிப்பிட்டது மட்டும் இல்லாம் அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி மக்களிடையேயும் கூட ரஜினியின் காலம் இனி அவ்ளோ தான் என பதிய வைத்தும் விட்டார்கள்.. இடையே பேட்ட என்ற ஒரே ஒரு படம் பழைய ரஜினியிசத்தை காட்டியிருந்தாலும் விஸ்வாசத்தை சொல்லி அதையும் மழுங்கடித்துவிட்டனர்.. 2.0 சங்கர் படம்.. கபாலி விமர்சன ரீதியில் அடி.. காலா அரசியல் வருகை..தர்பார் விமர்சன ரீதியில் நெகடிவ்..அண்ணாத்த சொல்லவே வேண்டாம்.. ரஜினி இனி அவ்வளவு தான் என்று கூற இதைவிடவும் முன்னுரை வேண்டுமா..?
அப்போது தான் ஜெயிலர் அறிவிப்பு.. பீஸ்ட் எனும் நெகடிவிட்டிக்கு நடுவே எந்தவித எதிர்பார்ப்பும் அற்ற ஒரு ரஜினி படமாக வளர்ந்து வந்தது.. விக்ரம் வந்தது.. சொல்லியடித்தது..ரஜினி இனி அவ்வளவு தான் கோஸ்டிகளுக்கு விக்ரம் ஒரு பூஸ்டை கொடுத்தது.. ஜெயிலர் வளர்ந்தது.. பொதுமக்களிடையே ஒரு எதர்பார்ப்பும் இல்லை.. காவாலா 2கே கிட்ஸ் இடையே ஒரு சலசலப்பை எழுப்பினாலும் ரஜினிக்கான எதிர்பார்ப்பு அது இல்லை என்பது எனக்கும் தெரியும்.. ஹுக்கும் பாடல் வந்தது.. கொஞ்சம் அடக்கி வாசித்த ரஜினி ரசிகனுக்கு ஒரு சின்ன நம்பிக்கை பிறந்தது.. இருந்தாலும் நெல்சன் மேல் நம்பிக்கை வரவில்லை.. ஆடியோ லாஞ் நடந்தது.. ரஜினி பேசினார்.. பல ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது பொது மக்களையும் அது கவர்ந்தது.. சந்திரமுகி பட வெளியீடு முன்பு நான் யானை இல்ல குதிரை என்று சொன்னது போல இதில் காக்கா இல்ல கழுகு.. இன்னும் மேல பறப்பேன் என்ற போது இனிமேல்லாம் இவர் மேல பறந்துடுவாரானு இணைய உலகம் அதை விஜயை நோக்கி சொல்வதாக திருப்பி விட்டு வேடிக்கை பார்த்தது.. ஜெயிலர் ரிலீஸ் ஆனது..
ரஜினி படங்களின் முதல் முக்கிய விசயம் அது ரஜினி ரசிகனை முதலில் திருப்தி படுத்த வேண்டும்.. பேட்ட என்னதான் திருப்தி படுத்தினாலும் அன்றைய அரசியல் சார்பு, விஸ்வாசம் க்ளாஸ் என அது வசூலாக மாறவில்லை.. ஆனால் ஜெயிலரில் அந்த பின்னிழுக்கும் factors எதுவுமே இல்லை.. ரஜினியிசத்தை மிக்ஸ் பண்ணி மாஸ் மசாலாவாக கொஞ்சம் திரைக்கதையிலும் நெல்சன் நிகழ்த்திய மேஜிக் ரஜினி ரசிகனுக்கு வேதியல் மாற்றத்தை உருவாக்கிவிட்டுவிட்டது என்று சொன்னால் மிகையில்லை.. தூங்கிக்கொண்டிருந்த அத்தனை ரஜினி ரசிகர்களையும் தட்டி எழுப்பிவிட்டுவிட்டது ஜெயிலர்… தமிழக மக்கள் 90% பேரிலும் ஒரு ரஜினி ரசிகன் இருப்பான்.. ஸ்லீப்பர் செல் போல மனதின் ஏதோ ஒரு மூலையில் அவர்களுக்கே தெரியாமல் ஒழிந்தபடி..அந்த ஒழிந்து கொண்டிருந்த ரஜினி ரசிக மனத்தை நெல்சன் தட்டி எழுப்பிவிட அத்தனை பேரும் தியேட்டர்கள் நோக்கி படையெடுக்க ஆரமித்ததன் விளைவு தான் நான்கு நாட்களில் முந்நூறு கோடி.. 12 வருடங்களாக உள்ளுக்குள் அழுது கொண்டிருந்த அத்தனை ரஜினி ரசிகர்களும் இன்று காலரை மடித்து கொள்கின்றனர்.. எப்படி இருந்த ஆளு தெரியிமா என பழைய வரலாற்றையே பேசி காலம் கடத்த வேண்டுமோ என புழுங்கிய ரஜினி ரசிகனுக்கு டேய் இது தாண்டா ரியல் ரஜினி என சண்டைக்கு போக வைத்துவிட்டது ஜெயிலர்.. பீனிக்ஸ் பறவை என்ற இல்லாத பறவையை இனி சொல்ல வேண்டாம்.. ரஜினி என்ற இருக்கும் ராஜாளியை சொல்லுங்கள்.. இல்லை இல்லை என்று சொல்லும் போதெல்லாம் இருக்கிறேன் நான் என எழுந்து வரும் ரஜினி ஜெயிப்பது நானே ஜெயிப்பது போல் இருக்கிறது..ஜெயிலர் படத்தில் ரஜினி பேசும் முதல் டயலாக்.. ரொம்ப நாளா என்ன திட்டிட்டே இருக்கீங்க.. சீக்ரமே நான் யாருனு காட்டுறேன் .. ரஜினி சொன்ன அந்த முதல் டயலாக்கின் பதில் தான் இந்த படத்தின் வெற்றி..சிம்பிளா சொல்லனும்னா

“என்றுமே ராஜா நீ ரஜினி”