‘கொலை’ – விமர்சனம்
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் மற்றும் டேபிள் ப்ராஃபிட் நிறுவனம் இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் “கொலை”. இயக்குனர் பாலாஜிகுமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள இப்படம் ஒரு கிரைம் திரில்லர் திரைப்படம்.
அப்பாட்மென்ட்டில் ஒன்றில் பிரபல மாடல் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். காவல் துறையில் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ள ரித்திகா சிங் மற்றும் துப்பறிவாளர் விஜய் ஆண்டனி இருவரும் விசாரிக்க ஆரம்பிக்கின்றனர்.
பலரது மீது சந்தேகம் வருகிறது.. இறுதியில் எதிர்பாராத ஒருவர்தான் குற்றவாளி என்பது கிளைமாக்ஸ்.
இதே பாணியில் ஒரு சில திரைப்படங்கள் வந்திருந்தாலும் .பாலாஜி குமாரின் தெளிவான திரைக்கதையால் நிமிர்ந்து நிற்கிறது இந்த படம்.
நடந்த ஒரு மாடல் அழகி கொலையை விசாரிக்க முதல் வழக்காக ரித்திகா சிங்கிடம் ஒப்படைக்கப்படுகிறது காவல்துறை அதற்கு அவருக்கு சிபாரிசாக விஜய் ஆண்டனி இருந்தால் நல்லா இருக்கும் என்று சொல்கிறார் ஒரு உயர் அதிகாரி.
ரித்திகா சிங்கின் முதல் வழக்காகவும் காவல்துறையினரால் அவருக்கு ஏற்படும் வஞ்சகங்களையும் புரிந்து கொண்டு தானே முன்வந்து இந்த வழக்கை எடுக்கிறார் விஜய் ஆண்டனி .அதன் பிறகு நடக்கும் படு சுவாரசியங்களே படம்.
முதலில் இந்த படத்தோட இயக்குனருக்கு ஒரு சபாஸ் சொல்லி ஆக வேண்டும்.எப்பயுமே துரு துருன்னு, விறு விறுன்னு நடிச்சுட்டு இருந்த விஜய் ஆண்டனியை இந்த படத்துல சூப்பரா நடிக்க வைத்திருக்கிறார். அவருடைய கெட்டப் பாக்குறதுக்கு பக்காவான என்கவுண்டர் போலீஸ் ஆபீஸரை ஞாபகப்படுத்துகிறது.
கொலை நடந்த சம்பவங்களை காட்டும் விதமாகட்டும் .கேமரா கதையோடு ஒன்றி பின்னி பிணைந்து செயல்பட்டு இருக்கிறார் ஒளிப்பதிவாளருக்கு நம்மளுடைய வாழ்த்துக்கள்.
பலவிதமான பல நபர்கள் மீது சந்தேகத்தை தன் திரைக்கதையால் அவிழ்த்து விட்ட இயக்குனர் ஒவ்வொன்றாக அந்த முடிச்சுகளை அவிழ்க்கும் காட்சிகளில் விறுவிறுப்பு தியேட்டரை தூள் கிளப்ப செய்யும்.
எப்பவுமே விளையாட்டாக நடித்துவிட்டு போகும் ஜான் விஜயை மன்சூர் அலிகான் மாடுலேஷன் ல நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் அதுவும் ரசிக்க வைக்கின்றது.
மொத்தத்தில் இத்தனை வருட இடைவெளிக்குப்பின் பாலாஜி குமார் இயக்கியிருக்கும் இந்த கொலை தன்னுடைய தெளிவான திரை கதையால் நிச்சயம் ஜெயிக்கும்.