மஞ்சக்குருவி விமர்சனம்
தான் உயிருக்கு உயிராக காதலித்த பெண் கிடைக்கவில்லை என்றாலும், தன் காதல் வீண் போனால் பரவாயில்லை என்றாலும்,
அந்த காதலியின் மன நிலைமையும் குடும்ப சூழலையும் புரிந்து கொண்டு தன் காதலுக்காக உயிரை தியாகம் செய்யும் ஹீரோவின் கதை தான் இந்த மஞ்ச குருவி.

கோவில் நகரமான கும்பகோணத்தை சங்கிலி வாத்தியார், குணா என்ற இரு ரவுடிகள் கையில் சிக்கி சின்னாபின்னம் ஆகிறது.
இந்த இரு ரௌடிகளிடம் ஊரே பயந்து நடுங்க ஹீரோவான புதுமுக நடிகர் நாட்டிலுள்ள குறை குற்றங்களை எடுத்துக் கூறிக்கொண்டு சோசியல் சர்வீஸ் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்து மனதையும் கவர்கிறார்.
கதாநாயகி தன் அண்ணன் ஒரு கொலைகாரன் குற்ற செயல்களில் ஈடுபடுபவன் என்பதை அறிந்து அவனை விட்டு தனது சித்தி வீட்டில் வாழும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார்.
சங்கிலி வாத்தியாராக வருவார் நீண்ட தலைமுடியுடன் பார்ப்பதற்கு பயங்கரமாக காட்சி அளிக்கிறார் அவரது கேரக்டர் படத்தில் படம் பார்ப்பவர்களை மிரட்டுவது நிச்சயம்.

குணா என்கிற கொடூரமான ரவுடி கதாபாத்திரத்தில் ஆடுகளம் கிஷோர் மிக கச்சிதமாக தனக்கு கொடுத்த வேலையை அற்புதமாக செய்திருக்கிறார்.
காமெடிக்கு கஞ்சா கருப்பு மினி பஸ் கண்டக்டராக வரும் கஞ்சா கருப்பு தான் வாங்கிய சம்பளத்திற்கும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் சிரிப்பை போன்ற முயற்சிக்கிறார் அது பலிக்கவில்லை.
தன் காதலுக்காக தன் காதலி தன் அண்ணனுடன் சேர்ந்தால் போதும் என்று நினைக்கக்கூடிய அந்த காதலன் என்னவோ தனக்கும் தாய் தந்தையர் இருப்பார்கள் என்பதை சற்றும் மறந்து இருக்கிறார் போல இல்ல இயக்குனர் திரைக்கதையில் கோட்டை விட்டுவிட்டாரா என்னவோ.
காதலன் இறந்ததும் துக்கம் தாங்காமல் அவர் மாறிலேயே விழுந்து காதலியும் உயிரு விடுவது கண்களில் கண்ணீர் வரவழைக்கும்.
இந்த ‘மஞ்ச குருவி’ யின் முடிவு சோகமே.