ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றமும், மக்கள் மன்றமும் இணைந்து பல இடங்களில் போட்டியிட்டு நூற்றுக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றியது அனைவருக்கும் நினைவிருக்கும்.தற்போது மாநகராட்சியின் உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜயின் மக்கள் மன்றமும் ரசிகர் மன்றமும் ,இணைந்து பல இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர் .
தேர்தல் கமிஷனில் அவர்கள் ஆட்டோ சின்னம் கேட்டுள்ளார்கள்.ஆனா அவர்கள் கேட்ட ஆட்டோ சின்னத்தை தர தேர்தல் கமிஷனர் மறுத்துள்ளார்.
இது நடந்து சில நாட்களிலேயே பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, விஜயுடன் சந்திப்பு. மரியாதை நிமித்தமான சந்தித்ததாக தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.நடிகர் விஜய்யின் மாநில ரசிகர் மன்றத்தின் பொறுப்புகளையும் விஜயின் உதவியாளராகவும் இருந்து வருபவர்தான் புஸ்ஸி ஆனந்த் .இவர் பாண்டிச்சேரியை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியும் நடிகர் விஜய்யும் சந்திப்பதற்கு இவர் கூட ஏற்பாடு செய்திருக்கலாம் என்ற ரகசிய தகவல் வெளியாகியுள்ளது.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் போட்டியிட நினைக்கும் விஜய் மக்கள் மன்றம் சென்னையில் போட்டியிடுவதாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் பாண்டிச்சேரி முதல்வரும் விஜயும் சந்தித்திருப்பது ஒருவேளை பாண்டிச்சேரியில் ரெண்டுபேரும் கூட்டணி வைக்க வசதியாக இருக்கும்.இன்னும் ஓரிரு நாட்களில் என்ன விஷயம்னு எல்லாத்துக்கும் நல்லபடியா தெரியும்.