ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘ஹர்காரா’ விமர்சனம்

by Tamil2daynews
August 24, 2023
in விமர்சனம்
0
‘ஹர்காரா’ விமர்சனம்
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘ஹர்காரா’-  விமர்சனம்

 

மிகவும் அருமையான தொழில்நுட்பத்தில் தெள்ளத் தெளிவான ஒளிப்பதிவுடன் வந்திருக்கும் படம் தான் ‘ஹர்காரா’.

இன்று நாம் பயன்படுத்தும்  நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் வருவதற்கு முன்பு பெரிய அளவில் பயன்பட்டது கடிதங்கள்தான். இந்த கடிதங்களை கொண்டு வரும் தபால்காரர் சென்ற தலைமுறை வரை மிக முக்கியமாக பார்க்கப்பட்டார். நம் வாழ்வில் தவிர்க்க முடியாத மனிதராக இருந்த தபால்காரரை பற்றிய படமாக வந்துள்ளது ஹர்காரா. ஹர்காரா என்றால் தபால்காரர் என்று பொருள்.
Ananda Vikatan – 16 August 2023 – “The postman is here Kulaswamy!” | Director Ram Arun Castro Harkaraதேனி மாவட்டத்தில் மலைகிராமத்தில் உள்ள தபால் நிலையத்தில் புதிய போஸ்ட் மேனாக வேலைக்கு சேருக்கிறார் காளி. (காளி வெங்கட் ) மக்கள் இவர் மீது அன்பு வைத்திருந்தாலும் இந்த கிராமத்தில் பணி செய்ய இவருக்கு விருப்பமில்லை. தபால் நிலையத்தை மூட கலெக்டருக்கு மனு போடுகிறார்.இந்த சூழ்நிலையில்   ஊர் பெரியவர் ஒருவர் மூலம் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலைகிராமத்தின் முதன் முதலில் வாழ்ந்த மாதேஷ்வரன் என்ற ஹர்காராவை (தபால் காரர் ) பற்றி தெரிந்து கொள்கிறார்.
இவர் யார்? இந்த முதல் ஹர்காரா செய்த விஷயம் என்ன என்பது பற்றி படம் சொல்கிறது. அதிகம் சினிமாவில் சொல்லப்படாத தபால்காரரை பற்றி சொல்லியதற்காக டைரக்டர் ராம் அருண் காஸ்ட்ரோவை பாராட்டலாம். போஸ்ட் மேன் என்பவர் கடிதம் மட்டும் தருபவர் இல்லை. மக்கள் தங்கள் வீட்டின் ஒரு ஆளாக பார்க்கிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் டைரக்டர். திரைக்கதை மெதுவாக சென்றாலும் ரசிக்க முடிகிறது. காட்சிகள் அனைத்தும் சினிமாவுக்காகான மிகைப்படுத்தல் இல்லாமல் எதார்த்தமாக உள்ளது.
Ananda Vikatan – 16 August 2023 – “The postman is here Kulaswamy!” | Director Ram Arun Castro Harkaraகாளி வெங்கட் தமிழ் சினிமாவிற்கு  கிடைத்த  திறமையான நடிகர். நடிப்பில் நம் வீட்டிற்கு வரும் தபால் காரரை நினைவுப்படுத்துகிறார்.  டைரக்டர் ராம் அருண் காஸ்ட்ரோ 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹர்காராவாக நடித்துளார்.எடுத்துக்கொண்ட கதைக்கான நியாயத்தை சேர்த்திருக்கிறது பிலிப். R. சுந்தர் மற்றும் லோகேஷ் இளங்கோவனின் ஒளிப்பதிவு. கிராமத்தின் அழகும், மலையின் பிரம்மாண்டமும் கலந்து ஒரு காட்சி மேஜிக் செய்திருக்கிறார்கள்.
சினிமாவுக்கான எந்த ஒரு பூச்சுகளும் இல்லாமல் ஒரு அழகியல் படமாக வந்துள்ளது ஹர்காரா.” 4 ஜி,5ஜி நுழையாத இடங்களில் கூட இந்த போஸ்ட் மேன் நுழைவான் “என்று காளி வெங்கட் சொல்லும் வசனம் இந்திய அஞ்சல் துறையின் வலிமையை காட்டுகிறது.  ஹர்காரா  படம் பார்த்தால் “சார் போஸ்ட்” என்று தபால்காரர் அழைக்கும் குரல் நம் நினைவுகளில் வந்து கொண்டிருக்கும். இந்தியாவின் பெருமை மிகு கம்பீரமான அடையாளம் அஞ்சல் துறை. இந்த அஞ்சல் துறையின் முகமாக உள்ள அஞ்சல்காரர்களுக்கு இப்படம் சமர்ப்பணம்
Previous Post

பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ படத்தின் அகில இந்திய திரையரங்கு உரிமையை ஸ்ரீதேவி மூவிஸ் சிவலெங்க பிரசாத் வாங்கியுள்ளார்!

Next Post

“துடிக்கும் கரங்களுக்கு முன்.. துடிக்கும் கரங்களுக்கு பின்..” ; உண்மையை உடைத்து பேசிய விமல்

Next Post

“துடிக்கும் கரங்களுக்கு முன்.. துடிக்கும் கரங்களுக்கு பின்..” ; உண்மையை உடைத்து பேசிய விமல்

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • திருவிழா போல நடைபெற்ற மன்சூர் அலிகானின் ‘சரக்கு’ இசை விழா..!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு

    0 shares
    Share 0 Tweet 0
  • மூன்று நண்பர்களை காதலிக்கும் நாயகியாக மேக்னா நடிக்கும் ‘நான் வேற மாதிரி’..!

    0 shares
    Share 0 Tweet 0
  • நாகேஷ் எனும் மகா கலைஞன்..!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மானிட்டரில் பார்க்கும்போதே அழுதுவிட்டார் இயக்குநர்

September 21, 2023

சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

September 21, 2023

மலேசியா மண்ணின் ‘படைத்தலைவனாக’ மாறிய மோகன், இணையத்தை கலக்கும் ‘ஹரா’ பாடல்

September 21, 2023

‘அவ்வையாரும், அதியமானும் சேர்ந்து சரக்கு அடித்தார்கள்’ என்கிறார் நாஞ்சில் சம்பத்!

September 21, 2023

தி மாபோகோஸ் நிறுவனம் பிரதீப் மகாதேவன் தயாரிப்பில் பிரவீன் சரவணன் இயக்கத்தில் சதீஷ், சுரேஷ் ரவி நடிக்கும் ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம்!

September 21, 2023

“இந்த கிரைம் தப்பில்ல” முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட திரு தொல்.திருமாவளவன்

September 21, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!