திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் பெற்றோருடன் நடந்து சென்ற 6 வயது சிறுமி திடீரென காணாமல் போன நிலையில் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில், திருமலை இரண்டாவது நகர காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அதனடிப்படையில் விசாரணையும் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை வனப்பகுதியில் லட்ஷிதா காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். உடற்கூறாய்வுக்காக திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு லட்ஷிதாவின் உடல் அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
ஏற்கெனவே திருப்பதி மலைப்பாதையில்கடந்த ஜுன் மாதம் கர்னூல் மாவட்டம் அதோனியை சேர்ந்த கோண்டா மற்றும் ஷிரிஷா தம்பதியினரின் 4 வயது மகன் கௌசிக்கை பாதயாத்திரை சென்றபோது சிறுத்தையொன்று கவ்வி சென்றது. அதை உடனடியாக கண்டறிந்ததால் பொது மக்கள், போலீசார் சத்தம் போட்டனர். இதனால் சிறுவனை வனப்பகுதியில் சிறுது தூரம் கவ்வி சென்று வனப்பகுதியில் விட்டு சென்றது சிறுத்தை.