இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது
மாநாடு என்கிற வெற்றிப் படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் இயக்குநர் பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இணைந்து தயாரித்து வரும் படம் ‘வணங்கான்’. தனது வித்தியாசமான படைப்புகளின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ள இயக்குநர் பாலா இப்படத்தை இயக்கி வருகிறார்.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதுகிறார். ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொள்ள படத்தொகுப்பை சதீஷ் சூர்யா கவனிக்கிறார். கலை இயக்குனராக ஆர்.பி.நாகு பொறுப்பேற்றுள்ளார். சண்டைக்காட்சிகளை சில்வா வடிவமைக்கிறார்.
கைகளில் சிலைகளை வைத்துக்கொண்டு முழுதும் சேறு படிந்த உடம்புடன் காட்சியளிக்கும் நடிகர் அருண் விஜய்யின் வித்தியாசமான தோற்றம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது