‘பாசக்கார பய’ விமர்சனம்
சுப்பிரமணி தேன்மொழியை நேசிக்கிறான், தேன்மொழியோ தாய் மாமனை விரும்புகிறாள். தேன்மொழியில் காதல் யாரோடு இணைந்தது என்பதை சுவாரசியமாகவும் கொஞ்சம் காமெடி கலாட்டா உடனும் சொல்லி இருக்கிறார் இயக்குனர்
விவேக பாரதி
தமிழ் சினிமாவுல ஒரு காலத்துல முடிந்த அளவுக்கு எல்லார் இயக்கத்திலேயும் நடிச்சிட்டு இருந்த ஒரு ஹீரோனா அது நம்ம விக்னேஷ் தான்.
இந்த படத்துல கதாநாயகிக்கு தாய்மாமன் என்ற அற்புதமா ரோல் பண்ணி இருக்காரு நல்லா நடிச்சிருக்காருகிறது இரண்டாவதுதான்.
முதல்ல நீண்ட நாட்களுக்கு பிறகு அவர திரையில பார்த்ததே ஒரு பெரிய சந்தோஷம் அப்படின்னு தான் அவருடைய ரசிகர்கள் நினைப்பாங்க.
அந்த அளவுக்கு தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து நிறைவு செய்திருக்கிறார் நடிகர் விக்னேஷ்.

வைக்கிறார்.
அது மட்டுமல்ல காதல் காட்சிகளில் கொஞ்சம் பின்னியும் எடுக்கிறார்.
அடுத்தது கதாநாயகி காயத்ரி தேன்மொழியாக அந்த கதாபாத்திரத்தில் இவரை தவிர வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை அந்த அளவுக்கு கதாபாத்திரத்தோடு ஒன்று போகிறார்.
தனது காதலனிடமும் தனது தாய் மாமனிடமும் சிக்கிக் கொண்டு தவிக்கும் அந்த நடிப்பு அபாரம் உங்களுக்கு தமிழ் சினிமாவில் இனி பெரிய பெரிய படங்கள் கிடைக்க நிறைய வாய்ப்பு உண்டு வாழ்த்துக்கள் காயத்ரி.
காமெடிக்கு எப்பவும் போல நம்ம கஞ்சா கருப்பு .
அவர் வர இடங்களில் ஒரு சில இடங்களில் கடுப்பு ஏற்றினாலும் ஒரு சில இடங்களில் அட நம்ம கஞ்சா கருப்பு அப்படின்னு நினைத்து சிரிக்க வைக்குது.
இந்த படத்தில் இயக்குனர் விவேக பாரதியும் நடித்திருப்பது ஒரு நல்ல விஷயம் .
இசைதான் இந்தப் படத்தோட முதல் கதாநாயகன் என்று சொல்லலாம் அந்த அளவுக்கு இசையமைப்பாளர் சௌந்தர்யன் அவருடைய வேலையை மிகவும் நேர்த்தியாக செய்திருப்பது இந்த படத்தின் கூடுதல் சிறப்பு.
கதைக்கு என்ன தேவையோ அந்த பாடல்களை மட்டுமே எடுத்துக் கொண்டு வாங்கிய இயக்குனருக்கும் அதை காதுக்கு ரீங்காரமாக இசையமைத்து கொடுத்த இசையமைப்பாளர் சௌந்தர்யனுக்கும் பாராட்டுக்கள்.
அதிலும் நிலவுக்கு சோகமா என்ற பாடல் மனதில் அடிக்கடி ரீங்காரம் இடுவது நிச்சயம்.
மொத்தத்தில் இந்த ‘பாசக்கார பய’ படம் பார்க்கும் நெஞ்சில் கொஞ்சம் பசையோடு ஒட்டுவது நிஜம்..