நந்தி வர்மன்’ – விமர்சனம்
AK Film Factory சார்பில், அருண்குமார் தனசேகரன் தயாரித்துள்ள படம், நந்திவர்மன்.
சுரேஷ் ரவி, ஆஷா வெங்கடேஷ், போஸ் வெங்கட், நிழல்கள் ரவி, கஜராஜ், ஆடுகளம் முருகதாஸ், அம்பானி சங்கர் உள்ளிட்ட பலரது நடித்திருக்க, G.V. பெருமாள் வரதன் இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது.
பல்லவ மன்னர்களின் சில வரலாற்று தரவுகளுடன், கதையை மிக நேர்த்தியாக சொல்லியிருக்கிறார், இயக்குனர் G.V. பெருமாள் வரதன். அமானுஷ்யமான காட்சிகளுடன் தொடங்கும் படம், அடுத்தாக என்ன நடக்கப்போகிறது? என்ற ஆவலைத் தூண்டி விடுகிறது.
நாயகனாக நடித்திருக்கும் சுரேஷ் ரவி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். சண்டைகாட்சிகளில் சிறப்பு கவனம் பெறுகிறார். இவருக்கும் நாயகியாக நடித்திருக்கும் ஆஷா வெங்கடேஷூக்கும் இருக்கும் காதல் காட்சிகள் குறைவு என்ற போதிலும், ரசிக்கும்படி இருக்கிறது. ஆஷா வெங்கடேஷ், ஒரு சில முகபாவங்கள் மூலமாக ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்.

ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சேயோன் முத்துவின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது.
ஜெரால்டு ஃபிலிக்ஸ் இசையில் பாடல்கள், பின்னணி இசை ஓகே.
கலை இயக்குநர் முனிகிருஷ்ணன் பாராட்டப்பட வேண்டியவர். கோவில்கள் சிலைகள் பிரமிப்பினை ஏற்படுத்துகிறது.
கொஞ்சம் முன்கூட்டியே வந்திருந்தால் இந்த நந்தி வரும் அணை தமிழக ரசிகர்கள் கொண்டாடியிருப்பார்கள்.