பாலாவின் வணங்கான் படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்
இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண்விஜய், ரோஷினி பிரகாஷ் ஆகியோர் ’வணங்கான்’ படத்தில் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து அடுத்த கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
அண்மையில் படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. ஒரு பக்கம் விநாயகர் சிலையும் இன்னொரு கடவுள் இல்லை என சொன்ன பெரியார் சிலையும் வைத்தபடி உடல் முழுக்க சகதியுடன் மேலே பார்த்தபடி இருக்கும் அருண் விஜய் இந்த போஸ்டரில் இருந்தார்.
படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, இயக்குர் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
இப்படத்தில் சூர்யா நாயகனாக நடித்து சில நாட்களில் கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் நடிகர் அருண் விஜய் இந்த படத்தில் தான் நடிப்பதாக உறுதியளித்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் தான் இயக்குனர் பாலாவின் திரை வாழ்க்கையில் அவரது தொடர் பயணத்தை நிர்ணியிக்கப் போகும் படம்.

இந்நிலையில், வணங்கான் படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளது. அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வௌியாகி உள்ளன.