‘தூக்குதுரை’ – விமர்சனம்
அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் தூக்குதுரை இந்த பெயரில் தான் நம்ம காமெடி நடிகர் யோகிபாபு, இனியா, நடித்து டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் வந்துள்ள படம் தூக்கு துரை.
ஜமீன்தார் பெண்ணான இனியா, திருவிழாவில் திரைப்படம் போட்டு காட்டும் ஏழை யான யோகிபாபுவை காதலிக்கிறார். இதனால் கோபம் கொள்ளும் ஜமீன் யோகிபாபுவை கிணற்றில் வைத்து எரித்து விடுகிறார். இந்த கிணற்றில் ஒரு விலை உயர்ந்த கிரீடம் மாட்டி கொள்கிறது. இதை எடுக்க முயற்சி செய்பவர்களை யோகிபாபு பேயாக வந்து பயமுறுத்துகிறார்.

யோகிபாபுவுடன் சேர்த்து மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், சென்றாயன் இன்னமும் பல காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் எங்கேயும் நகைச்சுவை இல்லை. எல்லோரும் சீரியசாக எதோ செய்து கொண்டியிருக்கிறார்கள். பல நடிகர்களின் நடிப்பு மேடை நாடக பாணியில் உள்ளது. யோகிபாபுவுடன் நடித்தால் குறைவான அளவில் நடிப்பை வெளி படுத்தினால் போதும் என்று இனியா நினைத்து விட்டார் போலும். அளந்து நடித்துள்ளார். யோகி பாபு உடன் தனிமையில் சந்தித்து பேசும் காட்சிகளில் இனியா முகம் சகிக்கவில்லை.சரி யோகி பாபுவுக்கு இது அதிகம்.

மொத்தமாக யோகி பாபுவிடம் ஒரு ஐந்து நாள் கால் சீட்டை வாங்கி இந்த படம் எடுத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்.
மொத்தத்தில் இந்த தூக்குதுரை தியேட்டரை விட்டு சீக்கிரம் தூக்கிருவாங்க துரை