ஜிகர்தண்டா 2 – விமர்சனம்
படத்தின் கதை, 1973இல் தொடங்குகிறது. மதுரையில் பிரபல ரெளடியாக இருக்கும் ராகவா லாரன்ஸுக்கு தமிழ் சினிமாவில் முதல் கருப்பு ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை வருகிறது.முதலமைச்சர் பதவியில் அமர ஆசைப்படுகிறார் இளவரசு. அதற்கு காவல்துறையில் பதவியில் இருக்கும் தன் தம்பியை பகடைக்காயாக உபயோக்கிக்கிறார்.
இன்னொரு பக்கம், போலீஸ் அதிகாரியாக ஆசைப்படும் கிருபய ஆரோக்கியராஜ் கதாபாத்திரத்தில் வரும் எஸ்.ஜே சூர்யா. மதுரையில் ’ஜிகர்தண்டா’ கேங்காக ரெளடியிசம் செய்யும் அல்லியன் சீசர் கதாபாத்திரல் வரும் ராகவா லாரன்ஸ்.
இந்த மூன்று பேரும் எதிர்பாராதவிதமாக ஒரு புள்ளியில் இணைய, அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் ‘ஜிகர்தண்டா- டபுள் எக்ஸ்’.
இறுதியில், சினிமா என்ற ஆயுதம் லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் வாழ்வை எப்படி புரட்டிப் போட்டது, அதிகாரம் எப்படி ஒரு இனத்தையே அழிக்கிறது என்பதைச் சொல்லி இருக்கிறது இந்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’.