பீட்சா முதல் மூன்று பாகங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பீட்சா-4 குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர் சி.வி. குமார்
தமிழ் திரையுலகில் திகில் திரைப்படங்களுக்கான புதிய டிரெண்டை ஏற்படுத்தி தக்க வைத்துள்ள பீட்சா வரிசையின் முதல் மூன்று பாகங்களின் ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து அதன் நான்காம் பாகமான ‘பீட்சா 4’ விரைவில் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் சி.வி. குமார் அறிவித்துள்ளார்.
மோகன் கோவிந்த் இயக்கத்தில் அஷ்வின் காக்குமனு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பீட்சா 3: தி மம்மி’ ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளை தொடர்ந்து திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு உலகெங்கும் வெற்றி நடை போட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, ‘பீட்சா’ திரைப்பட வரிசையின் நான்காம் பாகம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தயாரிப்பாளர் சி.வி. குமார் அறிவித்துள்ளார்.