ரஞ்சித், மாரி செல்வராஜ் வரிசையில் அம்புநாடு ஒம்பது குப்பம் இயக்குனர் ராஜாஜி
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு பின்தங்கிய கிராமம், அங்கே பல சமூக மக்கள் வாழ்கிறார்கள்.காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்து விடக்கூடாது என்கிற பிற்போக்குத்தனமான பழைமை வாத சிந்தனையை உள்வாங்கிய ஊர். சக மனிதனை சமமாக ஜாதியின் பெயரால், தீண்டாமை மற்றும் அடக்கி ஒடுக்கி வைக்க வேண்டும் என்கிற அதிகார மமதையில் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிற ஜாதி படிநிலையை காப்பாற்ற துடிக்கிற, அதிகாரத்தை கைப்பற்றி வைத்துக் கொள்ள வேண்டும் அதன் வழியாக ஊரை ஆள வேண்டும் என்கிற வெறியோடு இரு தரப்பு பண்ணையார்கள், கோவில் திருவிழா வருகிறது திருவிழாவில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் கோவில் பூசாரி வைத்திருந்த தாம்பூலத்தட்டை தொட்டு விபூதி எடுத்து விடுகிறார்கள்.
இதனால் அங்கு கலவரம் ஏற்படுகிறது, பண்ணையார்கள் தங்களுக்குள் இருக்கும் அதிகார பகையை ஒதுக்கிவைத்து விட்டு, பண்ணையார்கள் இருவரும் ஒன்று சேர்ந்து, தாம்பூலத் தட்டை தொட்டது தீட்டாகிவிட்டது எனக் கூறி நாட்டு கூட்டம் நடத்த திட்டமிட்டு வருகிறார்கள் அதே பகுதியில், ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக விடுதலைக்காக போராடக்கூடிய அரசியல் இயக்கம் நாட்டு கூட்டத்திற்கு போகக்கூடாது சட்டப்படி பிரச்சனையை எதிர்கொள்வோம் எனக்கூறி பட்டியல் சமூக மக்கள் பக்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள் இதை அறிந்த பண்ணையார்கள், கட்சிக்காரரிடம் நாம் தோற்றுவிடக்கூடாது தங்களது ஜாதி கௌரவத்திற்கு இழிவு ஏற்பட்டுவிடும் என கருதி தாம்பூல தட்டை தொட்டு விபூதி எடுத்த இளைஞரை மர்ம கொலை செய்து விடுகிறார்கள்.
இப்படத்தின் இயக்குனர் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக இப்படத்தை எடுத்துள்ளார்.படம் பார்க்கும் போது இன்னும் பல அதிர்ச்சிகரமான உண்மை சம்பவத்தை காணத்தவறாதீர்கள்.நவம்பர் 17 ந் தேதி தமிழகம் முழுவதும் ரீலீசாகிறது.