ரெடின் கிங்ஸ்லி TV நடிகைக்கும் இன்று இனிதே திருமணம் நடைபெற்றது
நெல்சன் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நடித்து கோலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ரெடின் கிங்ஸ்லி. இதையடுத்து ‘எல்கேஜி’, ‘கூர்கா’, சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ விஜய்யின் ‘பிஸ்ட்’, ரஜினியின் ‘ஜெயிலர்’ எனப் பல படங்களில் நடித்து கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லி, தான் நீண்ட நாள் காதலித்து வந்த சீரியல் நடிகை சங்கீதாவை இன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் நண்பர்கள், உறவினர்கள் சூழ மைசூரில் உள்ள கோயில் ஒன்றில் நடைபெற்றது.
இது குறித்துப் பேசிய அவர், “நானும் கிங்ஸ்லியுமே நீண்ட கால நண்பர்கள். அவரது டான்ஸ் மாஸ்டர்கள்தான் எனக்கும் மாஸ்டர்கள் என்பதால், அவருடனான நட்பு இன்றுவரை தொடர்கிறது. திருமண விஷயத்தில் அவர் நம்பிக்கை இல்லாமல் இருந்தார். ‘சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குங்க. இல்லேனா, ஸ்ட்ரெய்ட்டா அறுபதாம் கல்யாணம்தான் பண்ணவேண்டியிருக்கும்‘னு அவரை நாங்க கலாய்ச்சதும் உண்டு. அவரே ஒரு கட்டத்தில் மனசு மாறி, சங்கீதாவைக் காதலித்து வந்தார். இது பல வருடக் காதல்.