இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!
SAI RAM AVR Film Production மற்றும் SPM Pictures Sai Saran இணைந்து வழங்கும், இயக்குநர் சாய் பிரபா மீனா இயக்கத்தில், சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை வெளிப்படுத்தி, பெண் பாதுகாப்பை மையப்படுத்தி, அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் ஆளுமைகள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..,

இந்த இடத்தில் நான் நிற்க காரணம் என் ஆசான் ஜெய் ஆகாஷ் அவர்கள் தான், அவருக்கு என் நன்றி. சிறுபட தயாரிப்பாளர் சங்க தலைவர் அன்பு செல்வன் மிகப்பெரும் ஆதரவைத் தந்தார். தயாரிப்பாளர் ராம்குண்டலா ஆஷா அவர்கள் தான் படத்தை நம்பி எனக்கு வாய்ப்பு தந்து தயாரித்தார்கள். ஷகிலா மேடம் படபடவென பட்டாசு போல் நடித்து முடித்தார். மீசை ராஜேந்திரன் சார் நன்றாக நடித்து தந்தார். ஜெய் ஆகாஷ் சார் மூலம் தான் எனக்கு இங்குள்ள அனைவரையும் தெரியும். எல்லோருக்கும் என் நன்றிகள். பெண்களை மையப்படுத்தி, அவர்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி, இந்தப்படத்தை எடுத்துள்ளேன். ஒளிப்பதிவாளர் மிகப்பெரும் உறுதுணையாக இருந்தார். இசையமைப்பாளரை நான் நிறைய டார்ச்சர் செய்திருக்கிறேன். இப்படத்தில் படம் நன்றாக வரவேண்டுமென எல்லோருடனும் சண்டை போட்டுள்ளேன். ஆனால் அவர்கள் படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். சின்ன படம் பெரிய படம் என எதுவும் இல்லை அதை வைத்து மனிதர்களின் திறமையை எடை போடாதீர்கள். உலகமே கிறுக்கன் என சொன்ன எலான் மஸ்க் இன்று உலகையே ஆளுகிறார். எனில் என்னைமாறி இளைஞர்களும் ஜெயிக்க முடியும் என நம்புகிறேன். அனைவருக்கும் என் நன்றிகள்.


எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சில நாட்கள் மட்டும் தான் வேலை பார்த்தேன் எனக்கு நல்ல வேடம் தந்தார் இயக்குநர். ஜெய் ஆகாஷ் படைப்பாளியை உருவாக்கியதற்காக என் நன்றிகள். நான்கு பெண்கள் மேக்கப் இல்லாமல் மிக இயல்பாக நன்றாக நடித்துள்ளனர். எல்லோருமே சின்ன இயக்குநராக இருந்து, சின்ன நடிகராக இருந்து தான் பெரியாளாக ஆகிறார்கள். இப்படம் பெரிய வெற்றி பெறும் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.

சினிமாவின் 24 கிராப்டிலும் தேர்ந்த திறமை கொண்டவர் ஜெய் ஆகாஷ். மிகப்பெரிய ஆளுமை. அவர் படத்தில் வேலை பார்த்தாலே எல்லாம் கற்றுக்கொள்ளலாம். சாய் பிரபாவும் மிகத் திறமையானவர், மிக கஷ்டப்பட்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் மிகப்பெரிய படம். நடிகர் சங்கத்திற்கு திரு விஜயகாந்த் அவர்களின் பெயரை வைக்க வேண்டுமென எல்லோரும் சொல்லி வருகிறார்கள். நடிகர் சங்க கட்டிடம் முதலில் நன்றாக வரவேண்டும் அதற்கு என் சம்பளத்தில் ஒரு பகுதியை இந்த மேடையில் தருகிறேன். இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் நன்றி.
என்னை சினிமாவிலும் அரசியலிலும் அறிமுகப்படுத்திய தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு என் வணக்கம். கேப்டன் 53 இயக்குநர்களை அறிமுகப்படுத்தியுள்ளார் அதே போல் இயங்கி வரும் ஜெய் ஆகாஷுக்கு என் வாழ்த்துக்கள். என் வெற்றிக்கு என் வாழ்வுக்கு காரணம் சினிமா தான். சினிமா பலரை வாழவைக்கிறது. சினிமா பற்றி எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும். சினிமா தெரியாமலே இன்று நிறைய பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சினிமா மிக பவர்ஃபுல்லானது. அதில் சாதிப்பது அத்தனை எளிதானதல்ல. சாய் பிரபாவின் இரண்டு படத்திலும் நான் நடித்துள்ளேன், மிகப்பெரிய உழைப்பாளி. இந்தப்படத்திற்காக நிறைய கஷ்டப்பட்டுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நன்றி.
கௌரவத் தோற்றத்தில் ஷகீலா