இயக்குநர் சுசீந்திரன் இயக்கும், “2K லவ்ஸ்டோரி” இனிதே பூஜையுடன் துவங்கியது !!
City light pictures தயாரிப்பில் தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தின் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படம் “2K லவ்ஸ்டோரி ‘. இப்படத்தின் படப்பிடிப்பு நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொள்ள எளிமையான முறையில் பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது.
வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் நடக்கும் கதை என்பதால், இப்படத்தின் படப்பிடிப்பை கோவை மற்றும் சென்னையில் படக்குழு திட்டமிட்டுள்ளது.
புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
இப்படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.