கிஷோர் கதையின் நாயகனாக நடிக்கும் “மஞ்ச குருவி”
வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் தயாரிக்கும் புதிய படம் “மஞ்ச குருவி”. இன்றைய சமூக சூழலில், மாற்றங்கள் மட்டுமே மனிதனை நல்வழி படுத்தும் என்னும் கருத்தில், ஒருவன் தன்னை மாற்றிக் கொள்ள எதையெல்லாம் இழக்கிறான் என்ற கருவோடு, மஞ்ச குருவி படம் தயாராகி, இறுதிக்கட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது.


வேல் ஒளிப்பதிவில், ராஜா முகமது எடிட்டிங் செய்து, சௌந்தர்யன் இசையமைத்திருக்கும் மஞ்ச குருவி படத்தை, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, அரங்கன் சின்னதம்பி இயக்குனராக அறிமுகமாகிறார்.
மஞ்ச குருவி படத்தின் இசையை விரைவில் வெளியிட, தயாரிப்பாளர் விமலா ராஜநாயகம் ஏற்பாடு செய்து வருகிறார்.