சான் டியாகோவில் நடக்கும் காமிக்-கானில் ப்ராஜெக்ட் கேயின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சிக்காக பிரபாஸ்,
ராணா டகுபதி அமெரிக்கா சென்றுள்ளனர்.
“ரெபெல் ஸ்டார்” பிரபாஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகப் படமான ‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் கிலிம்ப்ஸ்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பும் காட்சியும் ஜூலை 20 அன்று சான் டியாகோ காமிக்-கான் (SDCC) 2023 இல் வெளியிடப்படும். படத்தின் முக்கிய காட்சியை வெளியிடவும், மேலும் ப்ராஜெக்ட் கே என்றால் என்ன என்பதை வெளிப்படுத்தவும் படக்குழு காத்திருக்கிறது.
ப்ராஜெக்ட் கே தான் இப்போதைக்கு மிகவும் விலை உயர்ந்த இந்தியத் திரைப்படம். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்த ஒரு பன்மொழி அறிவியல் புனைகதை தான் இந்த ப்ராஜெக்ட் கே. இது திரைப்படத் தயாரிப்பு வரலாற்றில் அவர்களின் ஐம்பது புகழ்பெற்ற ஆண்டுகளை நிறைவு செய்கிறது. பல சூப்பர் ஸ்டார்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றும் இவ்வளவு பெரிய திட்டம் இந்தியாவில் நடந்ததில்லை.