சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி இன்று வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரியோ ராஜ். இவர் முதன் முதலில் தொகுப்பாளராக தனது பயணத்தை துவங்கினார்.
இதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த ரியோ, அதை தொடர்ந்து நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்றது.
சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘பிக் பாஸ்’ புகழ் ரியோ ராஜ். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘ஜோ’. இந்த படத்தை இயக்குநர் ஹரிஹரன் ராம்.எஸ் இயக்கியுள்ளார்.
இதில் மிக முக்கிய ரோல்களில் பாவ்யா, மாளவிகா மனோஜ், அன்பு தாசன், ஏகன், விக்னேஷ் கண்ணா, கெவின், பிரவீனா லலிதாபாய் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார், ராகுல்.கே.ஜி.விக்னேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வருண்.கே.ஜி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
காதல் வேண்டுமா வேண்டாமா என்ற உன்னதை கருத்தை உயர்வாக சொல்கிறது இப்படம்.
ஆனாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்ற நடிப்பை அவர் வழங்கவில்லை.இன்றைக்கு முன்னணியில் இருக்கும் சில இளம் நடிகர்களை சற்று பாலோ செய்யுங்கள் ரியோ ராஜ்
ஹீரோயின் தன் பங்குக்கு கொடுத்த வேலையை மிக அழகாக செய்து இருக்கிறார் ஒரு சில காட்சிகளில் அழகாகவும் மிளிர்கிறார்.
படத்திற்கு பக்க பலமே இசையமைப்பாளர் தான் இவரது இசை படத்தில் ஆங்காங்கே நம்மை வருடுகிறது.
மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் சுமார் வந்து போகின்ற தனக்கு கொடுத்த வேலையை கரெக்டாக செய்திருக்கிறார்கள்.