ரிலீசுக்கு முன்பே பல கோடிகளை குவித்த அஜித்தின் விடாமுயற்சி..!
அஜித் நடிச்சு வரும் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், கிளிம்ப்ஸ் வீடியோ, டீசர் என எதுவுமே வெளியாகாமல் இருக்கும் இந்த வேளையில் விடாமுயற்சி படம் செய்திருக்கும் வசூல் சாதனை பத்தி ஒரு சேதி பரவி வருது..
அதாவது ஒரு படத்தோட ஹைப் மற்றும் ஒரு படத்தின் வியாபாரம் என்பது அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், கிளிம்ப்ஸ் வீடியோ, டீசர் ஆகியவையை மையப்படுத்தியதாகவே அமையும் இல்லையா. அந்த விஷயங்களை பார்த்துதான் படத்திற்கான மதிப்பை கொடுப்பார்கள். ஆனால் இது எதுவுமே வெளியாகாத விடாமுயற்சி படத்திற்கு வரவேற்பு மிகவும் அதிகமாக இருந்துவருவதென்னவோ நிஜம்.
அந்த வகையில் விடாமுயற்சி படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி நிறுவனமும் ஓடிடி உரிமத்தை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனமும் பல கோடிகள் கொடுத்து வாங்கிபுடுச்சு.
அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் இசை உரிமத்தை சோனி நிறுவனம் வாங்கிடுச்சாம்.
ஆக இப்பவே பல கோடி ரூபாய்க்கு வியாபாரத்தை செய்திருக்கும் விடாமுயற்சி படத்தின் இந்த அறிவிப்பு தல ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தி இருக்குது.
படத்தின் வியாபாரத்திற்கு தேவையான எதுவுமே வெளியாகாத நிலையிலும் விடாமுயற்சி படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு அஜித் என்று ஒற்றை பெயர் மற்றும் அந்த பிராண்டடுக்காக மட்டுமேதான் என அஜித்தை கொண்டாடி வாராய்ங்க அஜித் ரசிகர்கள்.