ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டரில் இருந்து வெளியானது மூன்றாவது பாடல்!
பைட்டர் படத்தில் இருந்து ‘ஷேர் குல் கயே’ (Sher Khul Gaye) மற்றும் ‘இஷ்க் ஜெய்சா குச்’ (Ishq Jaisa Kuch) என்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. இந்த பாடல்களில் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் தனது அசாத்திய நடன அசைவுகளால் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர் படத்தின் மூன்றாவது பாடலான ஹீர் ஆஸ்மானி (Heer Aasmani) வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த பாடல் விமானப்படை விமானிகளின் வாழ்க்கை, அவர்களின் தினசரி கடமை பற்றி எடுத்து கூறுகிறது. ‘ஹீர் ஆஸ்மானி’ பாடல் ஹிருத்திக் ரோஷனின் கதாபாத்திரத்தை அனைத்து விதத்தில் இருந்தும் வெளிப்படுத்துகிறது. அவர் ஸ்க்வாட்ரான் லீடர் ஏஸ் ஃபைட்டர் ஜெட் பைலட் ஷம்ஷர் பதானியா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விமானம் ஓடுபாதையில் செல்ல தயாராகும் போது என்ன என்ன வேலைகளை பைலட் செய்கிறார் என்பதை காட்டுகிறது. ஹீர் ஆஸ்மானி பாடல் விமானப்படை விமானிகளின் தினசரி வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.
