R புரடக்ஸன்ஸ் மற்றும் AVP சினிமாஸ் தயாரிப்பில் R.முத்துகுமார் திரைக்கதை எழுதி இயக்கி அடுத்த மாதம் திரைக்கு வரும் படம் ‘நோக்க நோக்க’.
படம் ஆரம்பக் காட்சியில் வானில் ஒரு கெட்ட சக்தி காட்சியாக ஆரம்பிக்கின்றது படம். கந்த சஷ்டி கவசத்தை தவறாக சித்தரிப்பவர்களை பழி வாங்குவதாக காண்பிக்க முயற்சித்து இருக்கிறார்கள்.
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணி புரியும் நேர்மையான நிருபர் பிரதிமா. இந்தியாவின் பண மதிப்பிழப்பு அறிவித்த நேரத்தில் நடந்த சட்டவிரோத பண மாற்றுதலை ஆவணமாக்கி ஒளிபரப்புக்கு செல்லும் வேலையில் சமூக விரோதிகளால் கொலை செய்யப்படுகிறாள். அவளது ஒரே மகளையும் கொன்று விடுகின்றனர். அந்தப்பெண் குழந்தை எப்படி அந்த கயவர்களை பேயாக உருமாறி பழி வாங்குகிறாள், கடவுள் அவளுக்கு எப்படி உதவுகிறார் என்பதை படத்தின் இயக்குனர்
சற்று தடுமாற்றத்துடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இதில் கதாநாயகன் கதாநாயகியாக வருபவர்களுக்கு என்ன வேலை என்றால் பணத்துக்காக ஆசைப்பட்டு ஒருவருக்கு நடந்த துரோகத்தை ஜாலியாக என்ஜாய் பண்ணும் இளசுகளுக்கும் இப்படத்தில் ஒரு பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் காதல் காட்சிகளும் படத்தில் ஒட்டவில்லை.
காமெடிக்கு கஞ்சா கருப்பு.
இந்த நவீன ஸ்மார்ட் போன் உபயோகிக்கும் குடும்பத்தில் அதனால் ஏற்படும் பாதிப்புகளை கஞ்சா கருப்பு வை வைத்து நகைச்சுவையாக காட்ட முயற்சித்து இருக்கிறார் அது தோல்வியே.
இதில் நடிகராக அறிமுகமாகியிருக்கும் பிரபல மக்கள் தொடர்பாக கணேஷ்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
படத்தின் ஒளிப்பதிவும் இசையும் ஓரளவுக்கு பரவாயில்ல ரகம்.
இயக்குநர் R.முத்துக்குமார் இவர் தமிழில் ஏற்கனவே தொடக்கம், வெண்ணிலாவின் அரங்கேற்றம், தெலுங்கில் ஸ்ரீ ராமுடு,
கன்னடத்தில் பிரெண்ட்லி பேபி மற்றும் சாக்லேட் பாய் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர்
R. முத்துக்குமார் கவனத்திற்கு…
பிரபலமான தொலைக்காட்சியில் வெளிவந்து வெற்றிகரமாக நடந்த ‘நாளைய இயக்குனர்’ போட்டியில் வெற்றி பெற்ற இயக்குனர்கள் தங்களுடைய அறிமுக குறும்படத்திலேயே வெற்றி பெற்று இன்றைக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உயரத்தில் இருக்கின்றனர்.
ஆனால் இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ஒரு சில படங்களை இயக்கியிருக்கிறார் என்பது நம்ப முடியவில்லை. ஏனென்றால் திரைக்கதையிலும் சரி காட்சிப்படுத்துதலிலும் சரி நிறைய இடத்தில் தடுமாற்றங்களும் நடிகர் நடிகைகளுக்கு சரியான நடிப்பு பயிற்சி கொடுக்காமல் இயக்கியிருப்பது தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது.
மொத்தத்தில் இந்த ‘நோக்க நோக்க’ படம் இயக்கிய இயக்குனரையே நோக்க வைக்கின்றது.